-ரிஸா ஜவ்பர்-
பங்களாதேஷ் முக்கிய
எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜமாஅதே இஸ்லாமியின் உயர் மட்டத் தலைவர் அப்துக் காதிர்
முல்லா மீதான மரண தண்டணை, பல்வேறு எதிர்வினைகளை பங்களாதேஷ் அரசியல் அரங்கில்
தோற்றுவித்துள்ளது. அடுத்த ஜனவரியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், எதிர்க்கட்சிகள்
தேர்தலைப் பகிஷ்கரிப்பதாக அறிவித்திருக்கின்ற நிலையிலும், குழம்பிப் போயுள்ள அரசியலை
மேலும் குழப்புகின்ற வகையில், முல்லா மீதான தண்டனை இவ்விதம் அவசரப்பட்டு
நிறைவேற்றப்பட்டதன் பின்னணி காரணம் புரிந்து கொள்ள முடியாததல்ல.