யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவு: சில அவதானங்கள்- (இரண்டாம் பகுதி)

மார்க்க ரீதியான போதிய புரிதல் இன்மையும், பாரம்பரிய மார்க்க அறிஞர்களின் போதிய ஒத்துழைப்பின்மையும் எமது கல்விப் பின்னடைவு தொடர்பிலான ஒரு காரணி என்று கடந்த ஆக்கத்தில் அடையாளப்படுத்தினோம். அதனோடு இணைந்ததாக மற்றும் சில காரணிகளை அடையாளப்படுத்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்

Share

முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவு: சில அவதானங்கள் (முதலாம் பகுதி)

முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவு என்ற அம்சம் எமது சமூகப் புத்திசீவிகள் மத்தியில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு பேசு பொருளாக இன்று மாற்றம் பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகம் கல்வி ரீதியில் ஒப்பீட்டு ரீதியில் பிற சமூகங்களை விட மிகவும் பின்னடைவு கண்டிருப்பது பெரும்பாலும் எல்லா புத்திஜீவிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அறைத்த மாவை திருப்பி அறைப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தப் பிரச்சினை தொடர்பாக இதுவரை போதிய அளவு பேசப்படாத சில அம்சங்களை அடையாளப்படுத்தி, சில யோசனைகளை முன்வைத்து, இது தொடர்பிலான ஒரு கலந்துரையாடலை  துவக்கி வைப்பதே இதன் நோக்கமாகும்.
Share

சமூக ஒற்றுமைக்கு ஆப்பு வைக்கும் சமகாலக் குத்பாக்கள்...!

குத்பாக்கள் அன்று தொட்டு முஸ்லிம் சமூகத்திற்கு வாய்க்கப் பெற்றுள்ள மிகவும் மகத்தானதும், வினைத்திறன் மிக்கதுமான ஊடகமாக திகழ்ந்து வருகிறது. ரசூல் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமூகத்தை வழிப்படுத்தவும், வினைத்திறனான முறையில் சமூகத்துடனான தொடர்பாடலை பேணவும் அதனைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கலீபாக்களும் கூட இதே வழி முறையையே பின்பற்றினார்கள்.

Share

இலங்கை: வளமான எதிர்காலத்தை நோக்கியா?


இலங்கையின் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் பெருமளவில் வியாபார சமூகத்தையும், முதலீட்டாளர்களையும் அச்சமடையச் செய்துள்ளது. குறிப்பாக நாட்டின் எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பிலும், தமது முதலீட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் இந்த அச்ச உணர்வு பெருமளவில் காணப்படுகிறது. யுத்தத்தின் நிறைவோடு உருவான இலங்கையின் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கைகளை, இந்த அரசியல் இழுபரி நிலை பெருமளவில் தகர்த்துவிட்டதாகவே தோன்றுகிறது.

Share

பாராளுமன்றத் தேர்தல், யாப்புச் சீராக்கம், சிறுபான்மை


ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று யாப்புச் சீராக்கம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில், அரசாங்கம் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. தனது கட்சிக்கு வலு சேர்க்கும் நோக்கத்தோடு முன்னெப்போதும் இல்லாத வகையில் நடிக, நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்களை அபேட்சகர்களாக களம் இறக்கியுள்ளது.

Share

ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி...


சூழல் தொடர்பான பிரச்சினைகள் எமது தலைமுறை எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சவாலாக இன்று மாறியிருக்கிறது. புவி வெப்பமடைதல், காலனிலை மாற்றம், அறிதான உயிர்கள் அழிவடைந்து வருதல் என சூழல் தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகளை உலகம் அனுபவித்து வருகிறது.

Share

Face Book தடை செய்யப்படுமா?


அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் தொடர்பாடல் துறையில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உயர் எழுத்தறிவு வீதத்தோடு ஒப்பிடுகையில், அண்மைக்காலம் வரை இலங்கை மக்கள் மத்தியில் இணையப் பாவணை மிகவும் குறைந்த மட்டத்திலேயே இருந்தாலும், . அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் தொடர்பாடல் துறையின் வளர்ச்சியோடு இணைந்ததாக இணையப்பாவணையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

Share

மடோல் துவ (මඩෝල් දුව)- ஒரு சிங்கள சிறுவர் நாவல்


மடோல் துவ (මඩෝල් දුව) மார்டின் விக்ரமசிங்கவின் ஒரு சிறுவர் நாவல். ஆங்கிலத்தில் Adventure Novels என்று சொல்வார்களே...! அந்த வகையறாவுக்குள் அடக்கும் படியான ஒரு நாவல் இது. நான் ரசித்து வாசித்த நாவல்கள் வரிசையில் இந்த சிங்கள நாவலும் ஒன்று.




Share

வறுமைப் பிரச்சினை: மனசாட்சிகளை இன்னும் உறுத்தவில்லையா?


தினமும் பட்டினி அல்லது அதனோடு தொடர்பான நோய்களினால் 25000 பேர் கொல்லப்படுகின்றனர் என்று சொல்லும் போது இலேசான அதிர்வு மனதில் ஏற்படத்தான் செய்கிறது. ஒவ்வொரு மூன்றறை செக்கனிற்கும் ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம்

Share

சிங்கள சமூகத்தினர் சிறுபான்மையினருக்கு எதிராக வாக்களித்ததார்களா?

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளும், குழப்பங்களும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. தேர்தல் குறித்த விவாதங்கள் ஒரு புறமாகவும், தேர்தல் முடிவு சொல்லும் சேதிகள் மறுபுறமாகவும் விவாதங்களை கிளரிக்கொண்டுள்ளன. மீண்டும் எமது சுதந்திரம் பரிபோய் விடுமோ என்ற விதத்தில் அமைந்துள்ளது  அண்மைக்காலத்தில் ஏற்பட்டு வரும் சில நிகழ்வுகள்.

Share

வெளிநாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிடுமா?

நேற்று வெளிவந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொன்சேகா நிராகரித்துள்ளமை எத்தகைய எதிரொலிகளை இலங்கை அரசியலிலும், துணைக்கண்ட அரசியலிலும் ஏற்படுத்தப்போகிறது என்பது மிகவும் முக்கியமான அம்சமாக நோக்கப்படுகிறது.



Share

பொன்சேகா தேர்தல் முடிவை நிராகரிக்கிறார்



இன்று வெளியிடப்பட்ட இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். வாக்கெண்ணும் பணிகளில் கணிசமானளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
Share

மஹிந்த ஒரு மகத்தான தலைவரா?


இலங்கையில் நிலவி வந்த மூன்று தசாப்த கால சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் இலங்கை சர்வதேச அரங்கில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றது. யுத்தம் நிறைவு பெற்றதன் பிற்பாடு முதன் முறையாக இடம் பெறும் தேர்தல் என்பதால், இந்த ஜனாதிபதித் தேர்தலும் பெருமளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. சர்வதேசம் இந்தத் தேர்தல் முடிவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ளது.

Share

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: எதிர்வு கூறல்கள் பொய்த்துப் போனதா?

தேர்தலுக்கு முந்தைய நாள் பதிவொன்றில் பொன்சேகாதான் ஜனாதிபதியாவார் எனறு குறிப்பிட்டிருந்தேன். பொன்சேகா வெற்றி பெறுவார் என்றுதான் பரவலாக எதிர் பார்க்கப்பட்டது. பரவலான எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்த எதிர்வு கூறல்கள் அனைத்தையும்  பொய்யாக்கிக் கொண்டு இலஙகை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியின் பக்கம் விரைந்து கொண்டிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.


Share

NewsView- பதிமூன்றாவது இதழ்




நிவ்ஸ் வீவ் பத்திரிகையின் பதுமூன்றாவது இதழ் புதுப்பொழிவுடன் வெளிவந்துள்ளது. இந்த இதழை வெளியிடும் நிகழ்வும் ஒரு வருடப்பூர்த்தியை குறிக்கும் நிகழ்வாக அக்குறனை அஸ்ஹர் கல்லூரி பிரதான மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தப் பத்திரிகை அக்குறணைப் பிரதேசத்துக்கான பத்திரிகையாக அல்லாமல் கண்டி மாவட்டத்துக்கான பத்திரிகையாக நிவ்ஸ் வீவ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share

பொன்சேகா ஜனாதிபதியாகிறார் ...

விடிந்தால் தேர்தல்.

முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும். முடிவுகள் எப்படி அமையப் போகின்றன? கடைசி நேர தேர்தல் குறித்த பதிவு இது.



சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் சரத் பொன்சேகா இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்". இருபத்தி ஏழாம் திகதி நண்பகலுக்குள் இப்படி ஒரு அறிவிப்பு வருமா?

Share

பிரான்ஸ்: மதச்சகிப்புத் தன்மை குறைந்து செல்கிறதா?

பிரான்ஸ் அந்நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடை அணிவதை விரைவில் தடைசெய்ய இருக்கிறது.



ஆழும் UMP கட்சியின் பாராளுமன்றத் தலைவர் Jean-François Copé சில தினங்களுக்கு முன் ஒரு சட்ட வரைபை சமர்ப்பித்திருந்தார். “மற்றவர் பார்க்கும் வண்ணம் பொது இடங்களிலும், பாதைகளிலும், எந்த ஆடையையோ அல்லது ஆபரணத்தையோ முகத்தை மறைக்கும் வண்ணம் எவறும் அணிய முடியாது" என இந்த சட்ட வரைபு சொல்கின்றது. இந்த அம்சத்தை எதிர்வரும் பிராந்தியத் தேர்தல்கள் முடிந்த பிறகு மார்ச் மாதத்தில் பாராளுமன்றம் விவாதிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது

Share

அல்லாஹ் யாருக்குச் சொந்தம்?



அண்மையில் "The Herald” என்ற மலேசியாவின் கிறிஸ்த்தவ மிஷ்னெரிப் பத்திரிகையொன்று அல்லாஹ் என்ற சொல்லை இறைவனைக் குறிக்க பயன்படுத்தியதால் ஏற்பட்ட சர்ச்சையில், கிறிஸ்தவர்களும் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என அந்நாட்டின் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளும் தெரிந்ததுதான். இந்தப் பிரச்சினை தொடர்பாக சில அம்சங்களை இங்கு பரிமாரிக் கொள்ள
விரும்புகின்றோம்.




Share

மனதைத் தொடும் ஒரு ஃபின்னிஷ் திரைப்படம்: “Letters to Father Jacob”






கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவின் 33வது அமர்வில் திரையிடப்பட்ட  திரைப்படம் ஃபின்னிஷ் திரைப்பட இயக்குனர் Klaus Haro இன் இயக்கத்தில் உருவான "Letters to Father Jacob” என்ற ஃபின்னிஷ் திரைப்படம். தன்னளவில் மிகவும் எளிமையான ஒரு திரைப்படமாக இருந்தாலும், மனிதர்கள் மனிதன் என்ற வகையிலும், மத ரீதியிலும் காட்டும் அன்பின் ஆழத்தை எளிமையாக சித்தரிப்பதன் மூலம் பார்வையாளனை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாகவும், அவனை வியப்பில் ஆழ்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது இத்திரைப்படம்.

Share

நிபந்தனைகள் இல்லை...!


அன்று வெயில் கடினமாக இருந்தது. மார்ச் மாதத்து மிகவும் உஷ்னமான வெயில் அது. மைதானமெங்கும் கல்லூரி மாணவர்கள் சிதறிக்கிடந்தார்கள். அவர்கள் அந்த பாடசாலையில், சில நாட்களில் நடைபெற இருக்கும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் பயிற்சிக்காகக் கூடியவர்கள்.

Share

ஒரு வருடப் பூர்த்தியில் நியூஸ் வீவ்- பிராந்தியப் பத்திரிகை


அக்குறனையில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த நியூஸ் வீவ் பத்திரிகை தனது ஒரு வருடப்பூர்த்தியை விரைவில் கொண்டாட இருக்கிறது. மாதாந்தம் வெளி வந்து கொண்டிருந்த இந்தப்பத்திரிகையின் 13ஆவது இதழை வெளியிடும் நிகழ்வும், ஒரு வருடத்தை பூர்த்தி செய்ததை கொண்டாடும் நிகழ்வும் எதிர்வரும் 22ஆம் திகதி அக்குறனை அஸ்ஹர் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற உள்ளது


(நிவ்ஸ் வீவ் அங்குரார்ப்பன விழாவில் நிவ்ஸ் வீவ் குழு சார்பாக A.C. இர்பான் உரையாற்றும் காட்சி)


Share

இலங்கை அரசியல் களத்தில் இஸ்லாமிய அரசியல் சிந்தனை...!





இலங்கை அரசியலில் மிகவும் முக்கியமான காலப்பகுதிகளில் இன்றைய காலப்பகுதியும் ஒன்று. ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அடுத்த ஆறாண்டு காலத்துக்கு இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப் போகின்றவை. மஹிந்தவும், பொன்சேகாவும் இயல்பில் பெரிய வேற்றுமைகள் கொண்டவர்கள் இல்லையாயினும், ஆட்சிக்கட்டிலில் யார் அமரப்போகின்றார்கள் எனபது அடுத்த ஆறு வருட காலத்துக்கு நாட்டு மக்களின் தலை விதியை கண்டிப்பாக தீர்மானிக்கும்..


இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடுகளை பொறுத்த வரை கண்டிப்பாக இஸ்லாமிய அரசியலின் கூறுகளை அவை பிரதிபலிக்க வேண்டும். ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை, ஒரு பெரும்பான்மை முஸ்லிம் நாட்டின் அரசியல் போராட்ட ஒழுங்கில் இருந்து அது நிச்சயம் வேறுபட்டிருக்கும்.

Share

வெற்றி வாய்ப்பு மஹிந்தவிடம் இருந்து நழுவிச் செல்கிறதா?





ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருப்பது பதினாறு நாட்கள். தேர்தலை முன் கூட்டியே நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த போது, மஹிந்தவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருந்தது. யுத்த வெற்றியின் பிற்பாடு மஹிந்த தனக்கு ஏற்படுத்தி வைத்திருந்த பிம்பம் மிகவும் பலமாக இருந்தது. வரலாற்றில் நாற்பதாண்டு காலம் வட இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மனனனான எல்லாளனை தோற்கடித்த துட்டுகைமுனுவுக்கு அவர் ஒப்பிடப்பட்டார். சிங்கள மக்களால் இலங்கையை ஆழும் ஒரு மன்னனாகவும், ஏன் தம்மை காக்க வாக்க வந்த இறைவன் என்று சொல்பவர்கள் கூட இருந்தார்கள்.
Share

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

முன்னைய பதிவுகள்

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்