விடிந்தால் தேர்தல்.
முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும். முடிவுகள் எப்படி அமையப் போகின்றன? கடைசி நேர தேர்தல் குறித்த பதிவு இது.
“சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் சரத் பொன்சேகா இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்". இருபத்தி ஏழாம் திகதி நண்பகலுக்குள் இப்படி ஒரு அறிவிப்பு வருமா?
இப்படியான ஒரு முடிவு வெளிவந்து விடுமோ என்று மஹிந்த தரப்பு அச்சம் கொண்டிருப்பது போல் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு கட்டுக்கடங்காத தேர்தல் வன்முறைகள் இடம் பெறுவதும், அரச தரப்பால் உபயோகப்படுத்தப்படும் மிக மலிவான பிரசார உத்திகளும் இதனை தெளிவாகவே படம் பிடித்துக்காட்டுகின்றன.
மிக இலகுவான வெற்றியை எதிர்பார்த்து குறித்த காலத்திற்கு முன்பே தேர்தலுக்கு வந்த மஹிந்வை, எதிர்கட்சிகளின் காய்நகர்த்தல்கள் செம குழப்பு குழப்பி விட்டதாகவே தெரிகிறது. தேர்தலுக்கு முன்பே மஹிந்தவின் பலத்தை எதிர்க்கட்சிகள் சரியாக எடை போட்டிருந்தன. ஆனால், எதிர்க்கட்சிகளின் பலம் மஹிந்தவுக்குத் தெரியாது. அவர் மிகவும் சாதாரணமாகத்தான் அவற்றை எடை போட்டிருந்தார். மாகாண சபைத்தேர்தல்களில் அடித்த அடியில் இன்னும் ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு அவை எழுந்திருக்காது என்று அவர் கணக்குப் போட்டிருந்திருக்கலாம்.
அதைப் பொய்யாக்கி விட்டது எதிர்கட்சிகளின் விவேகமான காய் நகர்த்தல்கள்.
வெற்றி தோல்வியை மட்டும் தீர்மானிக்கப் போவது மட்டுமல்ல இந்த தேர்தல் செய்யப்போவது. அநேகமாக பிரதான வேட்பளர்கள் இருவரில் யார் இந்த நாட்டில் தொடர்ந்தும் இருப்பது? யார் வெளியேறுவது? என்பதையும் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் .
பெருமளவில் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் தற்போது தெரியத்துவங்கியுள்ளன. அனேகமாக இருபத்தி ஏழாம் திகதி நண்பகலுக்குள், இந்த முன்னறிவிப்பு சரியானதா என்பது தெரிந்து விடும். இந்த எதிர்பாராத அரசியல் களநிலை மாற்றத்தின் யதார்த்தத்தை ஜீரணிப்பது மஹிந்த குழுமத்துக்கு அவ்வளவு சுலபமாக இல்லை.
எனவேதான், எதைச்செய்தாலும் பரவாயில்லை, எப்படியாவது எவன் தலையை அடகு வைத்தாவது இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று மஹிந்த குழுமம் கண்டிப்பாக இருக்கிறது.
குடும்ப ஆட்சி குறித்தும், மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்தும் எழுப்பப்பட்டு வருகின்ற குரல்களை சமாளிப்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை அரசு தரப்புக்கு. மஹிந்த தன்னைப் பற்றி உருவாக்கி விட்டிருந்த பிரம்மாண்டமான பிம்பத்தை முழுமையாக தகர்த்து விடக்கூடிய குரல்கள் இவை.
யுத்த வெற்றியோடு அமுங்கிப்போயிருந்த மஹிந்தவுக்கு எதிரான உணர்வலைகள், தற்போது புது உத்வேகத்தோடு ஓங்கி ஒலிக்கத்துவங்கியுள்ளன. தான் குறித்த பிம்பத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி விட்டு, அதை முற்றிலும் சிதைக்கும் விதத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது மஹிந்தவை பெரும் தர்ம சங்கடத்திக்குள்ளாக்கி விட்டது. இதனை சகித்துக்கொள்ள இயலாமல்தான், சில தினங்களுக்கு முன் மஹிந்த ஊடகவியளாலர் சந்திப்பொன்றில், ஊடகவியளாலர்கள் மேல் சீறி விழுந்தார்.
பொதுவாகப் பார்க்கும் இடத்து, வாக்களிப்புகள் நீதியாக நடந்தால், பொன்சேகா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாகவிருப்பதாகவே தெரிகிறது. பல்வேறு இணையதள கணிப்பீடுகளும், பொதுவான அவதானிப்புகளும் இதனையே சொல்லிக்கொண்டுள்ளன.
Face Book இல் இருக்கும் Fans அடிப்படையில் பொன்சேகாவே முன்னணியில் நிற்கிறார். அதேபோல், Muslim Guardian இணையதளம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 69.4% ஆனோர் தமது வாக்கு பொன்சேகாவுக்கே எனத்தெரிவித்துள்ளனர். 23.3% ஆனோரே தாம் மஹிந்தாவுக்கு வாகளிப்பதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக வாக்களித்தோர் தொகை 692 பேர்.
நமது யாத்திரிகன் வலைப்பூ நடாத்திய கருத்துக் கணிப்பிலும் இதே போன்ற ஒரு முடிவே கிடைத்தது. அதில் 64% ஆனோர் சிறுபான்மை மக்கள் பொன்சேகாவுக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். வெறும் 16% வீதம் பேரே மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மிகுதி 20% ஆனோரும் தமக்கு எந்த முடிவை எடுப்பது என்று தெரியவில்லை எனத்தெரிவித்துள்ளனர்.
நமது யாத்திரிகன் வலைப்பூ நடாத்திய கருத்துக் கணிப்பிலும் இதே போன்ற ஒரு முடிவே கிடைத்தது. அதில் 64% ஆனோர் சிறுபான்மை மக்கள் பொன்சேகாவுக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். வெறும் 16% வீதம் பேரே மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மிகுதி 20% ஆனோரும் தமக்கு எந்த முடிவை எடுப்பது என்று தெரியவில்லை எனத்தெரிவித்துள்ளனர்.
சிங்கள வாக்காளர்களில் ஒரு கணிசமான தொகையினரும், பெரும்பான்மையான முஸ்லிம், தமிழ் வாக்காளர்களும் நாளை பொன்சேகாவுக்கு வாக்களிப்பார்கள் என்றே சொல்லலாம்.
காரணம் தமிழர்கள் எப்படியும் மஹிந்தவுக்கு வாக்களிக்கப் போவதில்லை. யுத்தத்தின் வடுவும், அகதி முகாம்களில் தமிழ் அகதிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் தமிழ் மக்களை ஒரு ஆட்சி மாற்றத்தை பெரும்பாலும் ஆசிக்க வைத்திருக்கிறது. அவர்களை பொறுத்த வரை மஹிந்த ஒரு ராஜாவோ, கடவுளோ அல்ல.
யுத்த வெற்றியை உரிமை கேட்டு பொன்சேகாவின் அரசியல் பிரவேசம், மஹிந்த குடும்பத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள், அனைத்தையும் தாண்டி உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவு என அனைத்தும் சேர்ந்து மஹிந்தவின் பிம்பத்தை பெருமளவில் தகர்த்து விட்டதோடு, சிங்கள வாக்காளர்களை கணிசமான அளவு மஹிந்தவிடம் இருந்து திசை திருப்பியுள்ளது. முன்னைய ஆக்கமொன்றில் நான் சொல்லியிருந்தது போல், பொன்சேகாதான் சிங்கள இளைய தலைமுறையினரிடத்தில் ஹீரோவாக இருக்கிறார்: மஹிந்தவல்ல.
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மஹிந்த குடும்பத்தினரின் அதிகாரங்களும் மக்களிடத்தில் பீதியை விழைவித்துள்ளது.
முஸ்லிம்களைப் பொறுத்த வரை, ஆரம்பத்தில் மஹிந்தவிற்கு சார்பான ஒரு நிலை இருப்பது போல் தென்பட்டாலும் தற்போது நிலைமை மாறி விட்டதாகவே தெரிகிறது. குறிப்பாக வியாபார சமூகம் எதிர் கொள்ளும் சவால்களே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இந்த அரசு முக்கிய வியாபாரங்களை மஹிந்த 'குழுமத்திற்கு' கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதன் உண்மைத்தன்மை எப்படி இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுக்கு அடிப்படை இல்லாமல் இல்லை. அதே போல், இறக்குமதி வியாபாரம் செய்யும் சிறுபான்மை வியாபாரிகள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாக ஒரு கருத்தும் இருக்கிறது.
தற்போது அடிக்கடி சிறிய வியாபார நிலையங்களுக்குக் கூட Income Tax அதிகாரிகள் வருகிறார்கள் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. அத்தோடு மாடருத்தல், பள்ளைகளில் பாங்கு சொல்லுதல் உள்ளிட்ட அம்சங்களில் இடைப்பட்ட காலத்தில் இடம் பெற்ற சில அசம்பாவிதங்கள் காரணமாக ஏற்பட்ட மனக்குறைகளும் ஆழமாக உள்ளன. இடைக்காலத்தில் இடம் பெற்ற பிரபல வியாபரப்புள்ளிகள் கடத்தலகளோடும், வெள்ளை வேன் கலாசாரத்தோடும் மஹிந்த அரசுக்கு ஒரு மறைமுகத்தொடர்பு இருக்கிறது என்ற ஒரு கருத்தும் சமூகத்தில் இருக்கிறது. இவை எல்லாம் உண்மையா, பொய்யா என்பதைத் தாண்டி சமூகத்தில் இருக்கின்ற கருத்துக்கள்.
தற்போது அடிக்கடி சிறிய வியாபார நிலையங்களுக்குக் கூட Income Tax அதிகாரிகள் வருகிறார்கள் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. அத்தோடு மாடருத்தல், பள்ளைகளில் பாங்கு சொல்லுதல் உள்ளிட்ட அம்சங்களில் இடைப்பட்ட காலத்தில் இடம் பெற்ற சில அசம்பாவிதங்கள் காரணமாக ஏற்பட்ட மனக்குறைகளும் ஆழமாக உள்ளன. இடைக்காலத்தில் இடம் பெற்ற பிரபல வியாபரப்புள்ளிகள் கடத்தலகளோடும், வெள்ளை வேன் கலாசாரத்தோடும் மஹிந்த அரசுக்கு ஒரு மறைமுகத்தொடர்பு இருக்கிறது என்ற ஒரு கருத்தும் சமூகத்தில் இருக்கிறது. இவை எல்லாம் உண்மையா, பொய்யா என்பதைத் தாண்டி சமூகத்தில் இருக்கின்ற கருத்துக்கள்.
சிறுபான்மையினரை மஹிந்தவுக்கு வாக்களிக்க முடியாத படி செய்யும் இன்னொரு அம்சம், மஹிந்த அரசின் இனவாதப் பங்காளிக் கட்சிகளின் சில செயல்பாடுகள். ஜனாதிபதி பகிரங்கமாக கூட்டங்களில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முற்றிலும் விரோதமான கருத்துக்களை இவர்கள் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர்.
அனைத்தும் சேர்ந்து பெரும்பானமையான மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை ஆதரிக்கும் ஒரு சூழல் உருவாகி இருப்பதாகத் தெரிகிறது.
இவற்றில் சில குற்றச்சாட்டுக்கள் பொன்சேகா கூட்டுக்கும் பொருந்தினாலும் அது பெரிதாக எடுபடுவதாக இல்லை. உதாரணமாக, இனவாதம் பேசுவதில் ஹெல உறுபயவுக்கு எந்த விதத்திலும் சலைத்ததல்ல மக்கள் விடுதலை முன்னணி. ஐ.தே.கா வின் பலமான தனியார் துறை பிரச்சார எந்திரம் மிக சாணக்கியமாக தனது பிரசாரத்தை கொண்டு சென்றது போல் அரச எந்திரத்தால் இயலவில்லை. அதனால் அத்தகைய அம்சங்கள் சமூகத்தில் எடுபடவில்லை. அதனால் மலிவான பிரசார உத்திகளை அரசு கைகொள்ள வேண்டி ஏற்பட்டது.
தேர்தல் நியாயமாக இடம் பெற்றால் பொன்சேகா வெற்றி பெறுவார் என்றே தெரிகிறது. போகிற போக்கில் நாளை இரவோடு இரவாக மஹிந்த குடும்பம் நாட்டை விட்டு வெளியேரினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இவை எல்லாம் என் அவதானிப்புகள் மட்டுமே! இவை சரியா, பிழையா என்பதை அடுத்த நாற்பத்தெட்டு மணி நேர தேர்தல் முடிவுகள் சொல்லும்.
எது எப்படியோ, நாட்டுக்கு மிகவும் பொறுத்தமான ஒருவர் நாட்டுக்கு தலைவராக வரவேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனை. அது பொன்சேகா, மஹிந்த யாருடைய உருவத்தில் வந்தாலும் பிரச்சினை இல்லை.
Share
2 பதிவு குறித்த கருத்துக்கள்:
ஹ்ம்! இந்தச் செய்தியை எதிர்பார்த்தே காத்திருக்கிறோம்!
நன்றி அஷோக்பரன் உங்கள் வருகைக்கும், பின்னூட்டலுக்கும்.
Post a Comment