யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

மஹிந்த ஒரு மகத்தான தலைவரா?


இலங்கையில் நிலவி வந்த மூன்று தசாப்த கால சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் இலங்கை சர்வதேச அரங்கில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றது. யுத்தம் நிறைவு பெற்றதன் பிற்பாடு முதன் முறையாக இடம் பெறும் தேர்தல் என்பதால், இந்த ஜனாதிபதித் தேர்தலும் பெருமளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. சர்வதேசம் இந்தத் தேர்தல் முடிவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ளது.

இலங்கையின் சகல சமூகங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தல் முடிவுகளில் அக்கறையாக அவதானித்துக் கொண்டுள்ளன.  வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியிலும் இந்தத் தேர்தல் பெருமளவில் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி விட்டிருந்தது. இன்னிலையில்  மஹிந்த வெற்றி பெற்ற அறிவிப்பு இன்னும்  சிறிது  நேரத்தில்  உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்படவுள்ளது.

போருக்குப் பிந்தைய முதலாவது ஜனாதிபதி என்ற வகையில், புதிதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல்வேறு கடப்பாடுகள் இருக்கின்றன. மஹிந்தவுக்கு முன் இருக்கும் பல்வேறு கடப்பாடுகள் குறித்த ஒரு சுருக்கமான பதிவு இது.

01. சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதலும் தேசிய நீரோட்டத்தில் ஒன்றிணைப்பதும்.
மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் கூடச்செல்லவில்லை. யுத்தம் தந்த தழும்புகள் இன்னும் மாறாமல் இருக்கின்றன. யுத்தத்திற்கு பிந்தய காலப்பகுதியில் மானசீகமாக ஒரு நிச்சயமற்ற சூழலை தமிழ் மக்கள் எதிர் கொள்வது பெரிய உண்மை. தீவிர இனவாதிகள் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு சூழலில் முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் ஒரு "வளமான எதிர்காலத்தை" கனவு காணும் ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

அரசின் பாகுபாட்டுக் கொள்கைகள்தான் விரும்பியோ, வெறுத்தோ புலிகள் இயக்கத்தை தமிழ் சமூகம் ஆதரிக்கும் ஒரு சூழலை உருவாக்கியது. யுத்தம் நிறைவு பெற்றாலும், இந்நாட்டில் பல்லாண்டுகளாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை இன்னும் உரிய முறையில் தீர்க்கப்படவில்லை என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான ஒரு தீர்வுத்திட்டத்தை முன்கொண்டு செல்ல ஜனாதிபதி முன்வர வேண்டும். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அல்லாமல், தேசத்தின் நலனை முன்னிருத்தி அவர் இந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

02. அகதிகள் மீள் குடியேற்றம்



தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் எதிர் நோக்கி வரும் துயரங்கள் அவசரமாக தீர்க்கப்பட வேண்டும். கூடிய சீக்கிரத்தில் அவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு மற்றப் பகுதி மக்களோடு சமமாக வாழும் ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும். புலிகளால் வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் அகதி முகாம்களில் கடந்த பத்தொன்பது வருடங்களாக வாழ்ந்து வரும் வட பகுதி முஸ்லிம்களையும் இந்த இடத்தில் மறந்து விட முடியாது.


3.அபிவிருத்தி

ஜனாதிபதிக்கு இம்முறை வாக்களித்தவர்கள் அவர் மீது கொண்ட தனிப்பட்ட அன்பினால் வாக்களிக்கவில்லை. உயர்ந்து செல்லும் வாழ்க்கைச்செலவு போன்றவற்றுக்கு மத்தியிலும் ஜனாதிபதிக்கு தமது ஆணையை வழங்கிய காரணம், மூன்று தசாப்த சிவில் யுத்தம் காரணமாக தடைப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தியை முன் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை காரணமாகவே..! யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அனைத்து சமூகங்கள் மத்தியிலும் ஒரு புது நம்பிக்கை துளிர்த்தது. இலங்கை என்றாலே காரித்துப்பிக் கொண்டிருந்த ஒரு நிலை மாறி, நாடு முன்னேற்றப்பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை உருவானது.

இந்த நம்பிக்கை சிதறடிக்கப்படக் கூடாது.  ஜனாதிபதி  தான்  வாக்களித்தது  போல் ஒரு "வளமான எதிர்காலத்தை" உருவாக்க வேண்டும்.
  
4. அரசியல் யாப்புச்சீராக்கம்

எந்தவொரு நாட்டினதும் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அந்த நாட்டின் தலைவர் மக்களுக்கு பதில் சொல்பவராக இருக்க வேண்டும். எமது நாட்டின் அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு மிகக் கூடிய அதிகாரங்கள் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருக்கும் நிலையிலும், யாப்பை மாற்றுவது மாறி மாறி வந்த எந்தவொரு அரசாலும் சாதிக்க முடியாமல் போன ஒரு நிலையிலும், யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்ததன் மூலம் முன்னைய தலைவர்கள் சாதிக்க இயலாமல் இருந்த ஒரு அம்சத்தை சாதித்தது போல், இன்னாட்டில் தொடர்ந்தும் ஒரு ஜனநாயகக்கலாசாரம் நிலவுவதற்காக வேண்டி அரசியல் யாப்பை சீர்திருத்தும் பணியையும் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

5. சகவாழ்வு

இலங்கை அதன் தொண்மையான வரலாற்றில் மதங்கள், இனங்களிடையான நல்லிணக்கமும், சகவாழ்வும் பெருமளவில் பேணப்பட்டு வந்துள்ளது. கண்டி அரச சபை இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். துரதிஷ்டவசமாக அண்மைக்காலமாக அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்துக் கொண்டுள்ள இனவாத சக்திகள்  மீண்டும் ஒரு முறை இந்த தொண்மையான வரலாற்று பாரம்பரியத்துக்கு இலுக்கை ஏற்படுத்தி விடாமல் இருப்பதை உறுதி செய்வதில் மீண்டும் பதவி ஏற்கும் ஜனாதிபதியின் கைகளில் பாரிய பங்கிருக்கிறது. இதனை உணர்ந்து ஜனாதிபதி செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

6. ஊடகத்துறை, நீதித் துறை என்பவற்றின் சுதந்திரமான செயல்பாடு.

அண்மைக்காலமாக இலங்கையின் ஊடகத்துறை சுதந்திரம், நீதித்துறை சுதந்திரம் என்பன குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு துறைகளும் அரசியல் தலையீடின்றி சுதந்திரமாக இயங்குவது ஒரு நாட்டு ஜனநாயகத்தின் நீட்சிக்கு மிகவும் இன்றிமையாதது.



யுத்தத்தின் நிறைவோடு ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டி இருக்கிறது. அதில் முதல் அடி இந்த இரண்டு துறைகளிலும் ஏற்படுத்த வேண்டிய மறுசீராக்கங்களும், இவை இரண்டு துறைகளும் சுதந்திரமாக இயங்குவதை உறுதி செய்தலுமாகும்.



7.வியாபார, விவசாய சமூகங்களின் உரிமைகளை பாதுகாத்தலும், வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்கும் அளவுக்கு நாட்டின் அரசியல் கொள்கையை கவர்ச்சிகரமாக மாற்றுதல்.


ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் விவசாயிகளினதும், வியாபாரிகளினதும் பங்கு அளப்பறியது. இந்த இரண்டு சமூகங்களும் சிறப்பாக செயல்படுவதற்கான ஒரு சூழல் உருவாக்கப்பட்டாலே ஒழிய, ஒரு நாட்டால் பொருளாதார அபிவிருத்தி காண்பது சாத்தியமில்லை. அதேபோல், வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வியாபார, உற்பத்தி முயற்சிகளுக்கு சாதகமான ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும்.


இவை எல்லாம்  மீண்டும்  தெரிவு  செய்யப்பட்டிருக்கும்  ஜனாதிபதியின்  முன்னுள்ள பணிகள். இவை   அனைத்தும் இதயசுத்தியோடு செய்யப்பட வேண்டிய வேண்டிய பணிகள் என்பதில் சந்தேகமில்லை. இதை மஹிந்த செய்தால், அவர் தனக்கு ஏற்படுத்தி விட்டிருக்கும் ஒரு "மகத்தான தலைவர்" “சிறந்த ஆழுமை" என்ற பிரக்ஞையை இது மேலும் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல, உண்மையிலேயே மஹிந்தவை இந்நாடு ஒரு சிறந்த தலைவராக எதிர்காலத்தில் கொண்டாடும். இல்லாத பட்சத்தில் கால ஓட்டத்தில் அவரும் பத்தோடு, பதினொன்றாக மறக்கப்பட்டுப் போவார்.

மஹிந்த ஒரு மகத்தான தலைவரா? காலம்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். Share

2 பதிவு குறித்த கருத்துக்கள்:

THAMILPITHAN January 29, 2010 2:00 AM  

NAAI VALUKU MATTAI KATINALUM ATHAI NIMIRTHA MUDIYATHU. THAMILAR UDAYA PIRARCHANAI THEERATHU, THEERVUM KIDAIYATHU. MAHINDA ORU MAHATHANA THALAIVARAI IRUNTHAL THAMILANUKU ETHO SILA URIMAIGAL KIDAITHIRUKUM. THEERVU THITATAI KULY THONDI PUTHAITHA MANITHAN. SELVA KOORIYATHU POLA THEIVAMTHAN THUNAI. MAHENDRAN.TORONTO.CANADA

Riza Jaufer January 29, 2010 9:18 AM  

நன்றி Mylvaganam,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்.

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

முன்னைய பதிவுகள்

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்