யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: எதிர்வு கூறல்கள் பொய்த்துப் போனதா?

தேர்தலுக்கு முந்தைய நாள் பதிவொன்றில் பொன்சேகாதான் ஜனாதிபதியாவார் எனறு குறிப்பிட்டிருந்தேன். பொன்சேகா வெற்றி பெறுவார் என்றுதான் பரவலாக எதிர் பார்க்கப்பட்டது. பரவலான எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்த எதிர்வு கூறல்கள் அனைத்தையும்  பொய்யாக்கிக் கொண்டு இலஙகை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியின் பக்கம் விரைந்து கொண்டிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.


இதுவரை வெளிவந்த தேர்தல் முடிவுகளின் படி அவர்தான் முன்னணியில் நிற்கிறார். இன்னும் முழுமையாக முடிவுகள் அறிவித்து முடியா விட்டாலும், அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகளின் படி, அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் நிற்பது மஹிந்ததான். அனேகமாக மற்ற தொகுதிகளில் பொன்சேகா வெற்றி பெற்றாலும் கூட, ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.


எனவே, அடுத்த ஆறாண்டுகால இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். நமக்கெல்லாம் வளமான எதிர்காலம்தான் (සුබ අනාගතයක්) கிடைக்கும்: "நம்பிக்கைகுறிய மாற்றம்" (විෂ්වාසනීය වෙනසක්) உருவாகாது.


எதிர்வுகூறல்களுக்கு என்ன நடந்தது? மஹிந்தவின் செல்வாக்கு குறைந்து விட்டது என்று நாம் கருதியது பிழையா? இவ்வாறு சில கேள்விகள் எழுவது நியாமானதுதான்.


உண்மையில், மஹிந்த தனக்கு உருவாக்கியிருந்த உயர்ந்த பிம்பபத்தை இழந்துவிட்டார் என்று சொல்லப்பட்டு வந்ததை தேர்தல் முடிவுகள் பொய்யாக்கி விட்டன. இன்னும் அவருக்கு ஆதரவு இருக்கிறது என்தையே தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.



பொன்சேகா முன்வைத்த 'நம்பிக்கைதரும் மாற்றத்தை' சிறுபான்மை மக்களும், சிங்கள மேல்தட்டு மக்களும், பிரதான நகர்களில் வாழ்பவர்களும் ஆசித்தார்கள். ஆனால், அரச சேவை செய்வோர், விவசாயிகள், சிங்கள அடித்தட்டு மக்கள் மத்தியிலும்,   மஹிந்தவின் பிம்பம் அப்படியே இருந்தது. இந்த அம்சம் பிரதான நீரோட்ட மீடியாக்களாலோ, பொன்சேகா தரப்பாலோ சரிவர அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.



உண்மையைச் சொல்வதானால், சிங்கள மக்கள் மத்தியில் தனக்குரிய பலமான ஆதரவை திரட்ட பொன்சேகா தவறி விட்டார் என்றே சொல்லலாம்.  

குறிப்பாக, மஹிந்த தனது கவர்ச்சியான பேச்சு, மக்களைக் கவறும் விதத்திலான செயல்பாடுகள், யுத்த வெற்றி, அபிவிருத்தி குறித்த நம்பிக்கைகளை ஏற்படுத்தியமை காரணமாக சிங்கள மக்கள் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்தி இருக்கிறார். அவரது முகத்தை பார்க்கவே அலைமோதும் கூட்டத்திடம், அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எடுபடவில்லை என்பதோடு, குடும்ப ஆட்சி குறித்து எழுப்பப்பட்டு வரும் குரல்களும்  எடுபடவில்லை என்பது ஆச்சர்யமானதல்ல. 

இன்னும் தெளிவாகச் சொன்னால், அடிமட்ட சிங்கள மக்கள் ஆட்சி மாற்றம் ஒனறை விரும்பவில்லை. குறிப்பாக பொன்சேகா ஐ.தே.கட்சியோடு சேர்ந்து நாட்டை பிரிவனைக்குட்படுத்தப் போவதாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களும், நாட்டில் ஒரு இராணுவப் புரட்சி ஏற்படும் என்ற குற்றச்சாட்டும், நாட்டின் இறைமைக்கு அச்சுருத்தல் வரும் என்ற பயமுறுத்தல்களும் மக்களால் அப்படியே நம்பப்பட்டுள்ளமையையே இது காட்டுகிறது. 

யுத்த வெற்றியைத் தொடர்ந்து தூண்டப்பட்ட தீவிர தேசியவாத உணர்வுகளின் விளைவாகவும் இதனைக் கருதலாம்.அதேபோல், அரச சேவையில் இருப்பவர்களைப் பொறுத்தரை தனியார் மயமாக்கள் குறித்த அச்சம் அரசுக்கு வாக்களிக்கத் தூண்டியிருக்க முடியும்.  இந்த அம்சங்களுக்கு முன் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு கூட இரண்டாம் பட்சமாகவே கருதப்பட்டுள்ளது என்று தெளிவாகவே தெரிகிறது.  

எவ்வாறாயினும், நண்பகலளவில் முடிவுகள் முழுமையாக வெளியாகி முடியும் வரை எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதே உணமை.

Share

0 பதிவு குறித்த கருத்துக்கள்:

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

முன்னைய பதிவுகள்

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்