பிரான்ஸ் அந்நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடை அணிவதை விரைவில் தடைசெய்ய இருக்கிறது.
ஆழும் UMP கட்சியின் பாராளுமன்றத் தலைவர் Jean-François Copé சில தினங்களுக்கு முன் ஒரு சட்ட வரைபை சமர்ப்பித்திருந்தார். “மற்றவர் பார்க்கும் வண்ணம் பொது இடங்களிலும், பாதைகளிலும், எந்த ஆடையையோ அல்லது ஆபரணத்தையோ முகத்தை மறைக்கும் வண்ணம் எவறும் அணிய முடியாது" என இந்த சட்ட வரைபு சொல்கின்றது. இந்த அம்சத்தை எதிர்வரும் பிராந்தியத் தேர்தல்கள் முடிந்த பிறகு மார்ச் மாதத்தில் பாராளுமன்றம் விவாதிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த ஆண்டு கவனத்தை ஈர்க்கக்கூடிய ஹிஜாப் உட்பட எல்லா வகையான மத சின்னங்களையும் அரச பாடசாலைகளிலும், அரச நிறுவனங்களிலும் தடை செய்தது பிரான்ஸ். தற்போது எந்த ஒரு பொது இடத்திலும் முகத்தை மூடி ஆடை அணிவதை தடை செய்யும் ஒரு சட்டத்தை விரைவில் அமுல் படுத்துவதற்கு இருக்கிறது. இந்த சட்டம் அமுலுக்கு வந்தால், சட்டத்தை மீறி அணிபவர்கள் 750£ வரை தண்டம் செலுத்த வேண்டி ஏற்படலாம்.
இங்கு முக மூடி என்பது ஆப்கான் போன்ற நாடுகளில், முழுமையாக முகத்தை மூடி அணியும் அங்கியல்ல: வலைகுடா நாடுகளில் அணியும், கண்களைத் திறந்து அணியும் முக மூடியையே இது குறிக்கிறது. அந்த ஆடையே பிரான்சில் ஓரளவு வழக்கத்தில் இருக்கிறது.
இதுவும் கூட வெறும் 1900 பேர்தான் அணிகிறார்கள் என கணக்கெடுப்புகள் சொல்கின்றன. சட்ட மூலத்தைக் கொண்டு வரும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய தொகையல்ல.
இதுவும் கூட வெறும் 1900 பேர்தான் அணிகிறார்கள் என கணக்கெடுப்புகள் சொல்கின்றன. சட்ட மூலத்தைக் கொண்டு வரும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய தொகையல்ல.
இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற காரணம் பிரான்ஸின் நூறு வருடம் பழமையான மதச்சார்பற்ற வரலாற்றை பாதுகாப்பது என்று சொல்லப்படுகிறது. மதத் தலைமைகளின் சர்வதிகார ஆட்சியுடனான நீண்ட போராட்டத்தின் கசப்பான அனுபவங்கள் காரணமாக பிரான்ஸ் மிகக் குறைந்த சகிப்புத்தன்மையையே மதத்தின் மேல் காட்டுகின்றது என சில தினங்களுக்கு முன் Economist பத்திரிகை எழுதியிருந்தது.
ஸ்வீஸில் மினாராக்கள் மீதான தடையை அந்நாட்டு அரசு அறிவித்த போது பிரான்ஸ் அதிபர் சர்கோஸி அதை ஆதரித்ததோடு எல்லா நம்பிக்கைப் பிரிவை சார்ந்தவர்களையும் தமது மத அடையாளங்களை தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார்.
ஸ்வீஸில் மினாராக்கள் மீதான தடையை அந்நாட்டு அரசு அறிவித்த போது பிரான்ஸ் அதிபர் சர்கோஸி அதை ஆதரித்ததோடு எல்லா நம்பிக்கைப் பிரிவை சார்ந்தவர்களையும் தமது மத அடையாளங்களை தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார்.
மேலும் ஹிஜாப் என்பது பெண்களை அடிமைத்துவத்தின் சின்னம் என்றும் சில காலத்திற்கு முன் சர்கோசி தெரிவித்திருந்தார்.
அத்தகைய ஒரு 'அடிமைச்சின்னத்தை' தனது சட்ட மூலத்தின் மூலம் தடை செய்ய பிரான்ஸ் அரசு தயாராகி வருகிறது.
எனினும், ஹிஜாப் விவகாரம் மத நம்பிக்கையை தாண்டிய ஒன்று என்றும், அது ஒரு சமூக சார்ந்த ஆடை என்றும் குரல்கள் ஒலித்த வண்ணம் உள்ளன. 'அடிமைத் தனத்தின்' சின்னமாக பிரான்ஸ் அரசு கருதும் ஹிஜாபோ, அல்லது முகமூடியையோ பெண்கள் விரும்பியே அணிந்து கொள்ள விரும்பினால் அவர்களின் உரிமையில் இது தலையிடுவதாகாதா என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கவலை.
இந்த ஆடைகள் பொது இடங்களுக்குச் செல்லும் போதே முஸ்லிம் பெண்கள் அணிகிறார்கள். இதனை தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளச்சொல்வது கேலிக்கூத்தானது.
பெண்கள் ஆடை குறித்த மேற்கின் அளவீடுகளை மற்ற சமூகங்களின் மீது திணிக்க முயலும் ஒரு முயற்சி என்று இது விமர்சிக்கப்படுகிறது.
ஒரு நாடு தன் குடிமக்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற உரிமை இருக்கிறது என்று கூறி இலகுவாக பிரச்சினையை புறம் தள்ளிவிட முடியாது. இது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும், மத உரிமைகளையும் குழி தோண்டிப் புதைக்கும் ஓர் அம்சம்.
பிரான்ஸின் தொடர்ச்சியான இத்தகைய நடவடிக்கைகள், மத சகிப்புத்தன்மை மிகவும் குறைந்த நாடாக அது மாறி வருவதையே காட்டுகிறது. தெளிவாகச் சொன்னால், மீண்டும் ஒரு முறை பிரான்ஸ் தனது ஜனநாயக முக மூடியைத்திறந்து தனது அசிங்கமான நிஜ அடையாளத்தை உலகிற்குக் காட்டப் போகிறது.
பிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில் கட்டாயத்தின் பேரில் புர்காவை அணிய வேண்டிய அவசியமில்லை. அதைத் தடுக்க சட்டமும் அவசியமில்லை. அது அதன் மதச்சார்பற்ற தன்மைக்குப் பாதகமாக அமையப் போவதும் இல்லை.
உண்மையை சொல்வதாக இருந்தால், வளர்ந்து வரும் இஸ்லாமிய எழுச்சி குறித்த அச்சமே பிரான்ஸ் தலைமைகளை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது.ஐரோப்பாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு பிரான்ஸ்தான்.
பொது இடங்களில் குண்டு வைத்துத் தகர்க்கும் பயங்கர வாதக் கலாசாரம், கடந்த மூன்று நூற்றாண்டுகள் பிரான்ஸ் உட்பட காலனித்துவ சக்திகள் உலகளவில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களினதும், சுரண்டல்களினதும், அதன் விளைவாக உருவான வறுமை, பட்டினி உள்ளிட்ட பிரச்சினைகளினதும், அதன் ஆராத வடுக்களினதும், மத்திய கிழக்கில் ஜனநாயக விரோத ஆட்சியாளர்களை கொழுத்து வளரச் செய்வதினதும் விழைவு. பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலகு அஞ்சுவது இந்தப் பயங்கரவாதக் கலாசாரத்திற்கல்ல.
மிதவாதப் போக்குக் கொண்ட, ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கை கொண்ட அரசியல் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களை. குறைந்த பட்சம் தனது ஆள்புல எல்லைகுள்ளாவது, இஸ்லாமிய எழுச்சியின் குறைந்த பட்ச அடையாளங்களையும் துடைத்தெறிந்து விட பிரான்ஸ் முற்படுகிறது.
ஹிஜாப் விவகாரம் என்பது பிரான்ஸ் அரசின் எண்ணப்போக்கைப் பிரதிபளிக்கும் ஒரு அடையாளப்படுத்துகை மட்டுமே...!
மிதவாதப் போக்குக் கொண்ட, ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கை கொண்ட அரசியல் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களை. குறைந்த பட்சம் தனது ஆள்புல எல்லைகுள்ளாவது, இஸ்லாமிய எழுச்சியின் குறைந்த பட்ச அடையாளங்களையும் துடைத்தெறிந்து விட பிரான்ஸ் முற்படுகிறது.
ஹிஜாப் விவகாரம் என்பது பிரான்ஸ் அரசின் எண்ணப்போக்கைப் பிரதிபளிக்கும் ஒரு அடையாளப்படுத்துகை மட்டுமே...!
"மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல்" என்பது உலகை ஏமாற்றும் ஒரு பூச்சாண்டி. அவ்வளவுதான்.
வளர்ந்து வரும் இஸ்லாமிய எழுச்சியோடு ஐரோப்பா மிகவும் மெனமையாக நடந்து கொள்வதாக ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி வரும் அமெரிக்காவுக்கு பிரான்சின் இத்தகைய நடவடிக்கைகள் ஓரளவு ஆறுதலை அளிக்கலாம்.
கலாசாரங்கள் இடையிலான உரையாடல் மிக அதிகமான வலியுறுத்தப்படும் ஒரு காலப்பகுதியில், மாறி வரும் சர்வதேச வலுச்சமநிலையும், வயது முதிர்ந்து செல்லும் பிரான்ஸின் சனத்தொகையோடு ஒப்பிடுகையில், முஸ்லிம் உலகில் இருந்து அதிகமான குடிவரவுகள் தொடர்ச்சியாக அவசியப்படும் ஒரு நிலையிலும், பிரான்ஸின் இந்தப் போக்கு ஆரோக்கியமானதொன்றாக இருக்காது. இன்றைய மாறிவரும் உலக ஒழுங்கில் பிரான்ஸ் தனது கொள்கைகளை உடனடியாக மீள் பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது என்றே எண்ணத்தோன்றுகின்றது.
14 பதிவு குறித்த கருத்துக்கள்:
உங்கள் கருத்து மிக சரியானது. இதையே வளைகுடா நாடுகளும், இன்ன பிற இஸ்லாமிய நாடுகளும் பின்பற்றினால் நல்லது
நன்றி Prakash உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்,
"உங்கள் கருத்து மிக சரியானது. இதையே வளைகுடா நாடுகளும், இன்ன பிற இஸ்லாமிய நாடுகளும் பின்பற்றினால் நல்லது".
முஸ்லிம் நாடுகளிலும் தமது விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிவதற்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுவதாக நினைக்கிறேன்.
பிரான்ஸில் உள்ள நிலைமைக்கும், முஸ்லிம் உலகில் உள்ள நிலைமைக்கும் இடையில் ஒரு சிறிய சிறிய வேறுபாடு உள்ளது. அரபு நாடுகளைப் பொறுத்த வரை, அறைகுறை ஆடைகளை அனுபதிப்பது என்பது தமது கலாசாரத்தை பாதிக்கும் ஓர் அம்சமாக கருதுகின்றன. ஆபாசக்காட்சிகள், போதை வஸ்துப்பாவனை, வன்முறைக் காட்சிகளை சினிமாவில் காட்சிப்படுத்துவது தொடர்பில் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தடைக்கு சமாந்தரமானது இது.
மறுபுறத்தில், ஹிஜாப் ஆடையை அணிவது எந்த விதத்தில் பிரான்ஸ் கலாசாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது தெரியவில்லை. பிரான்ஸ் நிர்வாகம் குறிப்பிடுவது போல், ஹிஜாபை அங்கீகரிப்பது, அதன் மதச்சார்பற்ற கொள்கைக்கு அச்சுறுத்தலாக இருக்குமானால், ஹிஜாபை அங்கீகரிக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா?
//
அரபு நாடுகளைப் பொறுத்த வரை, அறைகுறை ஆடைகளை அனுபதிப்பது என்பது தமது கலாசாரத்தை பாதிக்கும் ஓர் அம்சமாக கருதுகின்றன.
//
அதைத்தான் பிரான்சும் கருதுகிறது. ஹிஜப் விஷயத்தில். அரபு நாடுகளுக்குத்தான் கலாச்சாரம் கத்திரிக்காய் எல்லாம் இருக்கா ? பிரான்சுக்கு இல்லையா ?
ஒருநாட்டின் பாதுகாப்பு அதிமுக்கியமான விடயம்.பாதுகாப்புக்கு முன்னால் மற்ற
உரிமைகள் எல்லாம் இரண்டாம் பட்ச
மானவையே.இதுதான் எல்லா மேற்கத்
தையநாடுகள் கொண்டுவரும் சட்டங்க
ளின் பின்னணி.ஆனால் வேறு வேறு
காரணங்களைக்கூறிக்கொள்ளுகிறார்கள்.
நன்றி வஜ்ரா உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்,
"ஹிஜப் விஷயத்தில். அரபு நாடுகளுக்குத்தான் கலாச்சாரம் கத்திரிக்காய் எல்லாம் இருக்கா ? பிரான்சுக்கு இல்லையா ?”
ஒரு முஸ்லிம் பெண் ஹிஜாபை அணிந்து தன்னை மறைத்துக் கொள்வதால் அது பிரான்ஸின் கலாசாரத்தை எந்த விதத்திலும் பாதிக்கும் என்று தெரியவில்லை . அவ்வாறு பாதிப்பதாக கருதினால், அது தனது மண்ணில் வாழும் எட்டு வீதத்திற்கும் அதிகமான மக்கள் குழுமத்தை தாம் ஏழவே நிலைநிறுத்திக்கொண்ட ஒரு கலாசாரத்தை அவர்கள் மீது திணிப்பதாகவே அமையும். ஹிஜாப் அணிவது பிரான்ஸில் வாழும் மற்ற சமூகத்தவர்களுக்கு பாதிப்பாக அமையாத பட்சத்தில், இவ்வாறு திணிப்பதை எந்த ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நன்றி Thevesh உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்,
"பாதுகாப்புக்கு முன்னால் மற்ற உரிமைகள் எல்லாம் இரண்டாம் பட்சமானவையே”.
சில ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்புக்காரணங்கள் என்று கூறி கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த தமிழர்களை பஸ்களில் ஏற்றி வன்னிக்குத் திருப்பி அனுப்பியது இலங்கை அரசு. சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறைகளில் பல தமிழர்களை அடைத்தது. இங்கும் பாதுகாப்புக்கு முன்னால் மற்ற எல்லா உரிமைகளும் இரண்டாம் பட்சமானவையே என்று கூறி அதனை எம்மால் நியாயப்படுத்த முடியுமா?
பிரான்ஸ் போன்ற தொழினுட்பத்தில் முன்னேறிய ஒரு நாடு நினைத்தால் ஒரு ஹிஜாப் அணிந்த ஒரு பெண்ணிடம் 'வெடிகுண்டு இருகிறதா' அல்லது வேறு ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா என்று சோதிப்பதற்கு ஒரு தொழினுட்பத்தையோ ஒரு கருவியையோ அறிமுகப்படுத்துவது முடியாத காரியமா?
இல்லாவிட்டால், முஸ்லிம் சமூகத்தின் சிவில் தலைமைகளோடு கலந்துரையாடி ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வரலாம் இல்லையா?
சவுதி அரேபியா போன்று உலகில் அனைத்து நாடுகளும் மத சகிப்புத்தன்மையோடு இருக்கவேண்டும்.
நன்றி குடுகுடுப்பை,
உங்கள் வரவுக்கும் பின்னூட்டலுக்கும்,
வல்லரசுகள் மத்திய கிழக்கின் முடிமன்னர்களையும், சர்வதிகாரர்களையும் கொழுத்து வளரச்செய்ய முற்படுவதன் பின்னனியையும் மறுபுறத்தில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளதே..!
Riza Jaufer said...
நன்றி குடுகுடுப்பை,
உங்கள் வரவுக்கும் பின்னூட்டலுக்கும்,
வல்லரசுகள் மத்திய கிழக்கின் முடிமன்னர்களையும், சர்வதிகாரர்களையும் கொழுத்து வளரச்செய்ய முற்படுவதன் பின்னனியையும் மறுபுறத்தில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளதே..!//
ஆக சவுதியின் சகிப்புத்தன்மைக்கும் மேற்குலகம் மட்டுமே காரணம், இல்லையென்றால் அங்கே ஒரு பன்முக சமுதாயம் சகிப்புத்தன்மையோடு இருக்கும் என்கிறீர்கள்.நல்ல சிந்தனை.
குடுகுடுப்பை said,
"ஆக சவுதியின் சகிப்புத்தன்மைக்கும் மேற்குலகம் மட்டுமே காரணம், இல்லையென்றால் அங்கே ஒரு பன்முக சமுதாயம் சகிப்புத்தன்மையோடு இருக்கும் என்கிறீர்கள்.நல்ல சிந்தனை."
ஜனநாயகத்திற்கு இடமற்ற நாடுகளில் மதச்சகிப்பை எதிர்பார்ப்பது எப்படி?
ஜனநாயக வழியில் ஆட்சிக்கு வரும் அரசுகளை வீட்டுக்கு அனுப்புவதும் சர்வதிகாரிகளை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து தன் பாட்டுக்கு ஆடும் பொம்மைகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதுமே கடந்த ஒரு நூற்றாண்டில் பெரும்பாலும் மத்திய கிழக்கில் வல்லரசுகளின் வழிமுறை. தாம் உருவாக்கி விட்டவர்கள் தவறு செய்யும் போது அவர்களை நோக்கி கையை நீட்ட வல்லரசுகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?
சரி அதை விடுங்கள்.... பிரான்ஸின் இந்த நடவடிக்கைக்கு என்ன நியாயம் சொல்கிறீர்கள்? இதை செய்வது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் சமத்துவம் பற்றியெல்லாம் முழங்கிய மேதை ரோஸோ பிறந்த நாடு. ஐ.நா. உலக அமைதியைப் பாதுகாக்க ஐ.நா. பாதுகாப்புச்சபையில் நிரந்தர அங்கத்துவம் கொண்ட நாடு. சௌதியில் வாழும் சிறுபான்மையினர் மிகவும் சிறிய தொகையினர். பிரான்ஸில்தான் சௌதியை விட பன் மடங்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். எந்த ஜனநாயக விழுமியத்தின் அடிப்படையில் இந்த சட்ட மூலத்தை பிரான்ஸ் கொண்டு வரப்போகிறது?
ஐரோப்பாவிலேயே பிரான்ஸில் தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் என்று நம்புகிறேன். பிரான்ஸ் ஒரு உண்மையான மதச்சார்பற்ற நாடு. அது இந்திய மதச்சார்பின்மை போல் பிழையானது அல்ல.
எந்த மதத்துக்கும் அவர்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். ஹிஜப் எல்லாம் நம்பிக்கையாளர்கள் அணிவது (நற்குடிகள் அல்ல). 10 % பிரான்ஸ் முஸ்லீம்களில் 2% கூட நம்பிக்கையாளர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் போடும் கூச்சல் தான் காதைப் பிளக்கிறது.
நன்றி வஜ்ரா!
யார் இந்த 'நற்குடிகள்'? எனக்கு விளங்கவில்லை. அப்படி ஒன்று இருந்தால், யார் அதைத் தீர்மானிப்பது, எந்த அடிப்படையில் தீர்மானிப்பது?.... நல்ல குடியில் இருந்தால்தான் அவர்களுக்கு உரிமை உண்டா? சமூகத்தின் அடி மட்டத்தில் பிறந்தவர்களுக்கு பிரான்ஸ் அரசு உரிமைகளை வழங்காதா?
பிரான்ஸின் சட்ட யாப்பில் இதை ஒரு இஸ்லாமியக் குடியரசு என்று பிரகடணப்படுத்தும் படி பிரான்ஸ் முஸ்லிம்கள் ஒரு போதும் கோரவில்லை. வெறுமனே தாம் சிறந்தது என்று நம்பும் ஒரு ஆடையை அணிந்து கொள்ள உரிமை வேண்டும் என்று கோருகிறார்கள். நீங்கள் சொன்னது போல், மிகச் சிறியதொரு தொகையினர்தான் இதனை அணிகிறார்கள் என்றால், பிரான்ஸ் அரசு இதனை ஏன் இந்தளவு அலட்டிக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
ஹிஜாப் அணியும் பெண் தான் ஹிஜாபை அணியாமல் வெளியில் செல்வதில் பெருமளவில் அசௌகரியத்தை உணர்கிறாள். அவள் ஹிஜாப் அணிவது மற்றவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துவதில்லை. எனவே, இந்த அம்சத்தை பிரான்ஸ் அரசு புரிந்து கொள்ள வேண்டும். தனது எல்லைக்குள் வாழும் சகல பிரஜைகளின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும், பெறுமானங்களையும் பாதுகாப்பதே ஒரு ஜனநாயக அரசின் கடமை. அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மக்கள் தம்மையும், தம் நம்பிக்கை, பெறுமானங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ர்பது எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இடம் பெற முடியாது.
முஸ்லீம்களுக்கே தெரியும். பிற மதங்களின் தேசத்தில் முஸ்லீம்கள் எப்படி இருக்கிறார்கள். முஸ்லீம்கள் நாட்டில் பிற மதத்தவர் நிலை எப்படி உள்ளது என்று. கண்ணை கட்டி கொண்டு உலகை இருட்டு என்று சொல்வதானால் தான் உங்களுக்கு எதுவுமே புரியவில்லை
நன்றி Lallu உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்,
முஸ்லிம் நாடுகள் சிலவற்றில் போதிய மத சுதந்திரம் இல்லாமல் இருப்பது உண்மையே! ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களே கூட சில நாடுகளில் போதிய உரிமைகளை அனுபவிப்பதில்லை. இந்த ஜனநாயக விரோத சக்திகளிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் பலர் அரபு நாடுகளில் இருந்து மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.
இருப்பினும் அரபு நாடுகள் செய்கின்றன, எனவே நாமும் அதே பாணியைத்தான் பின்பற்றுவோம் என்று சொல்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல: ஒரு ஜனநாயக தேசத்துக்கு அது அழகும் அல்ல.
Post a Comment