யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

Face Book தடை செய்யப்படுமா?


அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் தொடர்பாடல் துறையில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உயர் எழுத்தறிவு வீதத்தோடு ஒப்பிடுகையில், அண்மைக்காலம் வரை இலங்கை மக்கள் மத்தியில் இணையப் பாவணை மிகவும் குறைந்த மட்டத்திலேயே இருந்தாலும், . அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் தொடர்பாடல் துறையின் வளர்ச்சியோடு இணைந்ததாக இணையப்பாவணையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இரண்டாயிரமாவது ஆண்டின் துவக்கத்தில் இணையப்பாவணையாளர்கள் வெறும் 0.5% ஆன சனத்தொகையினர் மட்டுமே காணப்பட்டனர். இந்த வீதம் 2008 ஆம் ஆண்டாகும் போது 3.7% ஆக அதிகரித்தது என சமூக, பொருளாதார விவகாரங்களுக்கான ஐ.நா சபையின் அமையம் தெரிவிக்கிறது.

அரச துறை, தனியார் துறை செயல்பாடுகளால் வேகமாக அதிகரித்து வரும் தகவல் தொழிநுட்ப துறை சார்ந்த அறிவு இணையப்பாவணையை வேகமாக அதிகரித்து வருவதோடு, தொடர்பாடல் துறை சார்ந்த நிறுவனங்கள் மத்தியில் காணப்படும் போட்டி இணைய வசதியை பெற்றுக் கொள்ளுதல், கட்டணங்கள் என்பவற்றை கணிசமாக குறைத்து விட்டுள்ளதாலேயே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் செலவுகள் குறைந்தால் மட்டுமே சமூகத்தில் எல்லா மட்டத்தில் உள்ளவர்களும் இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

அண்மையில் ஏற்பட்ட ஜனாதிபதித் தேர்தலே இலங்கை வரலாற்றில் இணையத்தின் மூலமான பிரசாரம் பெருமளவில் முக்கியத்துவம் பெற்ற தேர்தலாக அமைந்தது. பாதை ஓரங்களிலும், சுவர்களிலும் சுவரொட்டிகள் நிறைந்திருப்பது போல், இணையத்திலும் bannerகளை முடிந்தது.

இணையத்தின் இந்த வளர்ச்சி பட்டி தொட்டியில் இருக்கும் இளைஞர்களுக்கும், அரசியல், தேர்தல், சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தமது கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்துள்ளது. இவர்களில் பலருக்கு சாதாரண சமூக ஒழுங்கில் இதற்கான வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை.

இந்தக் கருத்துப் பரிமாறல்கள் ஜனநாயகத்தின் நீட்சிக்கும், சிறப்பான அரச நிர்வாகத்துக்கும் பங்களிப்பு செய்யும் என்பதற்கு மேலாக, மூன்று தசாப்த கொடூர யுத்தத்தால் சிதைந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்க்கவும், சமாதானத்தை ஏற்படுத்தவும் இத்தகைய கலந்துரையாடல்கள் வலிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.

எவ்வாறாயினும் இந்த சுதந்திரன கருத்துப்பரிமாறலுக்கு அபாயம் ஏற்படலாம் என்ற கவலை பல தரப்பின் மத்தியிலும் அண்மைக்காலமாக எழுந்து வருகிறது. உறுதிப் படுத்தப்படாத சில் தகவல்களின் படி Face Book, Twitter உள்ளிட்ட சமூக வலைதளங்கள் விரைவில் தடை செய்யப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலியான தகவல்களை பொது மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படலாம் என்பதே இதற்கான காரணம். உத்தியோக பூர்வமாக எந்த அறிவிப்பும் வராவிட்டாலும், இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் சில சம்பவங்கள் இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் படியாகவே இருக்கிறது.

உதாரணமாக, Reporters without Boarders இணைய சுதந்திரத்தை முற்றாக கட்டுப்படுத்திய நாடாக இல்லாவிட்டாலும், இணையத்தின் செய்திகளை பரிமாரிக்கொள்ளும் உரிமை தொடர்பில் மிக அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகள் வரிசையில்அவஸ்திரெலியா, பஹ்ரெய்ன், எரிற்றியா, மலேசியா, தென் கொரியா,தாய்லாந்து, UAE, யெமன், 
சிம்பாப்வே போன்ற நாடுகள் வரிசையில் இலங்கையின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

 இலங்கை தொடர்பாடல் கட்டுப்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளர் அனுஷா பெல்பிடா, Lanka Business Online இணைய தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கும் போது தமக்கு இது குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்று தெரிவித்தார். “இணையதளங்களை மேற்பார்வை செய்வது TRC இனுடைய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணியல்ல. அவ்வாறு ஒரு மாற்றத்தை கொண்டு வருவதாக இருந்தாலும் கூட அதற்கு பல மாதங்கள் எடுக்கும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

என்றாலும், இலங்கையின் அண்மைக்கால அனுபவங்களை அவதானிக்கும் போது, இந்த உறுதி மொழி திருப்திப் படும் படியான எந்த அம்சத்தையும் தெரிவிக்கவில்லை.

அத்தகைய ஒரு தடையை கொண்டு வருவதில் தொழினுட்ப ரீதியில் எந்த சிக்கலும் இல்லை. இத்தகைய அம்சங்களில் நீண்ட கால அனுபவம் பெற்ற சீனா அதற்குரிய சகல உதவிகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் அன்று உத்தியோக பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பல சுதந்திர இணைய தளங்கள் தற்காலிகமாக பார்வையிட முடியாத படி தடுக்கப்பட்டிருந்ததும், ஒரு தேர்தலில் பெருமளவிலான முறைகேடுகள் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த செய்திகள், தகவல்கள் என்பவை தடையற்ற விதத்தில் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி பல அரச சார்பற்ற நிறுவனங்கள் இதனை கண்டித்திருந்ததும் இங்கு ஈண்டு நினைவு கூறத்தக்கது.

எனவே, ஏற்கனவே அரசாங்கம் இணைய தளங்கள் தொடர்பிலான தணிக்கையை ஆரம்பித்து விட்டது. எதிர்காலத்திலும் இது தொடரும் என்றே தெரிகிறது. எனவே, Face Book போன்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் தடை செய்யப்படும் என வரும் செய்திகளை அவ்வளவு இலகுவாக புறம் தள்ளி விட முடியவில்லை.

Pornographic Sites களை இலங்கை தடை செய்த போது அதனை பலரும் வரவேற்றனர்.  

எனினும், அரசியல் நோக்கங்களோடு மாற்றுக்கருத்துக் கொண்ட வலை தளங்களை தடை செய்வது சமூகத்திற்கு எந்த நன்மையையும் கொண்டு வராது. ஜனநாயகத்தின் நீட்சிக்கு எமது காலத்தில் வலைதளங்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரம் மிக அவசியம்.

பத்திரிகை இல்லாத அரசாங்கம், அரசாங்கம் இல்லாமல் ஒரு பத்திரிகை இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலை வந்தால் நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன்" ( Thomas Jefferson (1787).

யுத்தம் முடிவடைந்த பிறகு ஒரு வகை சுதந்திரக்காற்றை மக்கள் சுவாசிக்க ஆரம்பித்து இருப்பதோடு, நவீன தொழினுட்பம் கருத்து வெளிப்பாட்டுக்கான பல சந்தர்ப்பங்களையும் வழங்கியுள்ளது. இணைய தளங்களுக்கு விதிக்கப்படும் தடைகள் மக்களால் தமது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு விதிக்கப்பட்ட தடையாகவே பார்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. உள்ளூர் மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் அரசின் செல்வாக்கை குறைக்கும் ஒரு செயல்பாடு இது என்பதில் சந்தேகமில்லை. சீனா பாணியிலான ஒரு இரும்புத்திரை அரசை மக்கள் ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை.

பிழையான தகவல்கள் பரவுவதை தடுப்பதுதான் அரசின் நோக்கம் என்றால் அதற்கு இணைய தளங்களை தடுப்பதுதான் வழியல்ல. பொது மக்கள் மத்தியில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க அரசு வேறு வழிகளைக் கையாலலாம். உண்மையில், 'போலித் தகவல்களை' மக்கள் நம்பக்காரணம் அரச ஊடகங்கள் மக்களின் நம்பிக்கையை வெல்லும் விதத்தில் செயல்படாமைதான்.

தமது நிலைப்பாடுகளுக்கு முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கும் இணையதளங்களை தடை செய்வது இதற்கு ஒரு போதும் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் அச்சுருத்தலானதும் கூட. அரசியல் வாதிகள் மக்களுக்குப் பொறுப்புக் கூறும் தேவையை இல்லாமல் செய்து விடுவதோடு, தேசிய பாதுகாப்பின் பெயரில் சில சுய நல அரசியல் வாதிகள் தமது சுய நல நோக்கோடு செயல்படவே அத்தகைய செயல்பாடுகள் வழி செய்யும்.

அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.
Share

6 பதிவு குறித்த கருத்துக்கள்:

Unknown February 16, 2010 8:36 PM  

முன்சிப்புத்தகதுக்கும் ஆப்பா அட பாவிங்களா

Riza Jaufer February 16, 2010 8:44 PM  

நன்றி சங்கர்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்...

ம்ம்ம்... என்னங்க பண்றது...

கன்கொன் || Kangon February 17, 2010 9:23 AM  

//Phonograph Sites//
pornographic என்று வரவேண்டும்...
மற்றையது இதற்கு எதிர்ப்பும் இருந்தது.

எந்தத் தளங்களையும் தடைசெய்வதோ கட்டுப்படுத்துவதோ மிகவும் பிழையானது.
ஆனால் தேர்தல் அன்று எம்மவர்கள் (இலங்கையர்கள்) ஆதாரமில்லாத செய்திகளை, போராட்டங்களை எல்லாம் பேஸ்புக் ஊடாகவே கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
இதை எல்லாம் ஒரு அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர மற்றைய நாடுகள் அனுமதிக்கப் போவதில்லை என்பது யதார்த்தம்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...
நல்ல பகிர்வு...

Riza Jaufer February 17, 2010 12:38 PM  

நன்றி கங்கொன்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்.

coolza March 12, 2010 7:54 PM  

ரீஸா யார் சொன்னது ஃபஸ்புக் தடைசெய்யப்போகிரதென்று.
இப்போ அரசியல் கூட இதுலதான் நடதுரான்க.
சாகிர்
கண்டி.

Riza Jaufer March 12, 2010 8:02 PM  

நன்றி சாகிர்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்,
நீங்கள் சொன்னது போல் எல்லோரும் அதில் அரசியல் செய்ய முடிவதால்தான் இந்த தடை குறித்தே அரசு யோசிப்பதாகத் தோன்றுகிறது.

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்