யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

சிங்கள சமூகத்தினர் சிறுபான்மையினருக்கு எதிராக வாக்களித்ததார்களா?

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளும், குழப்பங்களும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. தேர்தல் குறித்த விவாதங்கள் ஒரு புறமாகவும், தேர்தல் முடிவு சொல்லும் சேதிகள் மறுபுறமாகவும் விவாதங்களை கிளரிக்கொண்டுள்ளன. மீண்டும் எமது சுதந்திரம் பரிபோய் விடுமோ என்ற விதத்தில் அமைந்துள்ளது  அண்மைக்காலத்தில் ஏற்பட்டு வரும் சில நிகழ்வுகள்.

தேர்தல் முடிவுகள் தெளிவாகவே சிறுபான்மை மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்: மஹிந்தவின் ஆட்சியில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, தெற்கில் வாழும் சிங்கள மக்களின் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கும் ஜனாதிபதிக்கு, இந்த அம்சத்தை புரிந்து தனது எதிர்கால செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு இருக்கிறது.

தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனாதிபதி என தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜனாதிபதியே குறிப்பிட்டமை, அவர் தனது பொறுப்பை உணர்ந்திருக்கிறார் என்பதைத் தெளிவு படுத்துகிறது. 

இவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும் கூட, துரதிஷ்டவசமாக சில தீவிர இனவாதிகள் இந்தத் தேர்தல், பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவோடு மட்டும், ஒரு ஜனாதிபதியால்  சிறுபான்மை மக்களின் ஆதரவின்றியே வெற்றி பெற முடியும் என்பதை நிரூப்பித்துள்ளதாக குரல் எழுப்பி வருகின்றனர். அதேபோல், 'பெரும்பான்மையினரை சுரண்டி வாழ்ந்த சிறுபான்மையினருக்கு' இந்தத் தேர்தல் நல்ல பாடம் புகட்டி இருப்பதாக வேறு கதையளந்து வருகின்றனர். 

உண்மையில் சிங்கள் மக்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றே...! தேர்தலில் மஹிந்த வெற்றி பெறுவதற்கும் பொன்சேகா தோல்வியை தழுவுவதற்கும் காரணம், பொன்சேகாவால் சிங்கள சமூகத்தின் அடிமட்டம் வரை தனது பிரசாரத்தை கொண்டு செல்ல முடியாது போனமையே!  

அத்தோடு மஹிந்த ஏற்கனவே, சிங்கள மக்கள் செறிந்து வாழும் கிராமப்புறங்களில் கணிசமான ஆதரவைபெற்றிருந்ததும், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட தீவிர தேசியவாத அலைகளும், அவர் மேற்கொண்டு வந்த அபிவிருத்தி திட்டங்களும் அவரது வெற்றியை உறுதி செய்யப் போதுமாக இருந்தன.  

உண்மையில், தேர்தல் குறித்த சந்தேகங்கள் ஒரு புறம் எழுப்பப்பட்டு வந்தாலும்இடம் பெற்றதாகக் கூறப்படும் அந்த குளறுபடிகள் மஹிந்தவின் வெற்றியைத் தடுத்திருக்குமா என்பது சந்தேகமானதுதான்

காரணம் 'நம்பிக்கைக்குறிய மாற்றத்தை' (විෂ්වාසනීය වෙනසක්)  ஏற்கனவே மஹிந்த உருவாக்கிவிட்டிருந்தார் . குறிப்பாக பஸ் வண்டிகளிலும், பொது இடங்களிலும் அச்சமின்றி நடமாடும் ஒரு சூழலை உருவாக்கியவர் மஹிந்ததான். இதை விட இன்னொரு மாற்றத்தை தெற்கில் வாழும் கிராமப் புற சிங்கள மக்கள்  ஆசிக்கவில்லை. இதோடு இணைந்த விதத்தில் உருவாகி இருந்த தீவிர தேசியவாத உணர்வுகளை மீறி சிங்கள மக்களின் மனதில் இடம் பிடிக்க பொன்சேகாவால் இயலவில்லை.

சிங்கள் மேட்டுக்குடியினர், மேற்கு மயப்பட்ட நகர்ப்புறக் குடிகள், சிறுபான்மையினர் இவர்களின் மனங்களில் மட்டுமே பொன்சேகாவால் இடம் பிடிக்க முடிந்தது. கிராமப்புற சிங்கள் மக்கள் மஹிந்தவுக்குப் பின்னாலேயே நின்றார்கள். 

கிராமப் புற சிங்கள மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்க இன்னொரு காரணம் பொன்சேகாவால் சிங்களவர்களின் உணர்வுகளை தட்டியெழுப்ப முடியாமல் இருந்தமை.  

குறிப்பாக கிராமப் புறங்களைப் பொருத்தவரை பொருளாதார ரீதியான பிரச்சினைகளை மையப்படுத்துவதொடு, பெருமளவில் தேசிய வாதிகளையும் பயன்படுத்தி இருந்தால் பலமான வாக்கு வங்கிகளை பொன்சேகாவால் பெற்றிருந்திருக்க முடியும். ஊழலற்ற ஆட்சி, குடும்ப ஆட்சியை அகற்றுதல் என்பதெல்லாம் அவர்களைப் பொறுத்த மட்டில் தம் தகுதிக்கு மீறிய ஆடம்பரமாகவே இருந்தன.
 
இந்த விதத்தில், பொன்சேகாவின் தவறும் சேர்ந்துதான் சிங்கள மக்களை மஹிந்தவுக்கு வாக்களிக்க தூண்டியதை மறந்து விட முடியாது.

எவ்வாறாயினும் மஹிந்த பெற்ற வாக்கு அவரது நாட்டுப் பற்றுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும், மக்களோடு கலந்து பலகும் அவரது இயல்புக்கு கிடைத்த பரிசாகவும், நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வார் என்று மக்கள் நம்பியமைக்குப் பகரமாக கிடைத்ததாகவுமே பார்க்கப்பட வேண்டும்.

தீவிர கருத்து முகாம்களைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்வது போல், சிறுபான்மையினருக்கு எதிராக சிங்கள மக்கள் வாக்களிக்களித்ததாகக் கருதினால் அது தமது நிறக்கண்ணாடிகளை அணிந்து கொண்டு நோக்கும் அவர்களது பக்கச்சார்பான தன்மையையே பிரதிபலிக்கும்.

LTTE அழிக்கப்பட்டதை சிங்கள மக்கள் விரும்பினார்கள். அதற்கு காரணத்தையும் LTTE இனர்தான் சமைத்துக் கொடுத்திருந்தார்கள். குறிப்பாக பஸ் வண்டிகள், பொது இடங்களில் குண்டுகள் வைத்ததன் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு வழி சமைத்ததுதான் LTTE இனர் வெறுக்கப்படுவதற்கு ஒரு பிரதான காரணியாக இருந்தது

இந்த அச்ச உணர்வை அகற்றி சிங்கள் மக்கள் நிம்மதியாக நடமாடும் ஒரு சூழலை உருவாக்கியதன் மூலம் மஹிந்த மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். ஒரு மஹாராஜாவாக சில போது ஒரு கடவுளாக அவர் மதிக்கப்பட்டார். இந்த மதிப்பே அவருக்கு வேண்டிய வாக்கு வங்கிகளை அவருக்கு வாங்கிக் கொடுத்தது. சிறுபான்மையினருக்கு எதிரான துவேஷ உணர்வல்ல


உண்மையில் இன்றைய இலங்கை அரசியல் களத்தில் அவசியம் தேவைப்படுவது, பெரும்பான்மை சமூகத்தால் தனித்து தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிப்பதல்ல. சிறுபான்மை சமூகங்களையும் இணைத்துச் செல்லும் ஒரு அரசியல் ஒழுங்கே தற்போது அவசியப்படுகிறது. யுத்தம் முடிந்து ஒரு வருடம் கூடக் கழியவில்லை. அதன் வடுக்கள் இன்னும் மறையவில்லை. யுத்தம் பதித்த தடங்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. தற்போது இருப்பது சிறுபான்மை சமூகங்களை பிரதான நீரோட்டத்தில் கலக்கச்செய்வதையும், பெரும்பான்மை சமூகத்தோடு சமனாக வாழ்வதையும் உறுதி செய்வதுதான்.

ஜனாதிபதி அடிக்கடி பொது மேடைகளில் முழங்கி வந்ததைப் போல் 'இந்த நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் இல்லை' என்பதை நிரூபிப்பதுதான் இன்றுள்ள பிரதான தேவை. 

அதற்குப் புறம்பான எந்தவொரு செயல்பாடும் நாட்டிற்கு நல்லவொரு விடிவை கொண்டு வராது. இன்னொரு சமூகத்தின் சமாதியின் மீது தமது நல்வாழ்வை நிருவ முயலும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்பதற்கு உலக வரலாறு ஒரு சான்று. ஏனெனில், எட்வர்ட் சைட் சொல்வது போல் 'வரலாறு மனசாட்சியை விட நியாயமாக இயங்குகிறது'.  

வளமான எதிர்காலம் (සුබ අනාගතය) இந்த நாட்டின் எல்லா சமூகங்களுக்கும் பொதுவானதாக இருக்கட்டும்.
Share

2 பதிவு குறித்த கருத்துக்கள்:

PPattian February 01, 2010 7:53 PM  

நியாயமான கருத்து.. எதிர்காலம் வளமாய் இருக்க பிரார்த்தனைகள்..

Riza Jaufer February 01, 2010 8:09 PM  

நன்றி PPattiyan,
உங்கள் பிரார்த்தனைகளும், எல்லோருடைய பிரார்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்