Share
Share
Labels ஜனாதிபதி தேர்தல்
Share
Labels இலங்கை , சித்தி லெப்பை , முஸ்லிம்கள் , வரலாறு
Share
Labels அரசியல் , இலங்கை , ஜனாதிபதி தேர்தல்
"விஞ்ஞானிகளின் மூடநம்பிக்கை" என்ற எமது முன்னைய கட்டுரை ஒன்றில் நிறைய விஞ்ஞான உண்மைகள் என்று நாம் கருதுபவை அனைத்தும் உண்மையிலேயே ஆழமான அடித்தளத்தை கொண்டவையல்ல, பல போது அதிகார வர்க்கத்தின் அபிலாசைகளை திருப்திப் படுத்தும் ஒரு மறைமுக அரசியல் அந்த விஞ்ஞான கருத்துக்களின் பின்னணியில் இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தோம்.
Share
Labels அறிவியல் , சித்தாந்தம் , டார்வினிஸம் , விஞ்ஞானம்
Share
Labels கல்லூரி வாழ்வு
இரவுகள் நீண்டு செல்கின்றன...!
Share
Labels சமூக அவலங்கள் , வேலையில்லா பட்டதாரிகள்
Share
Labels சமூக அவலங்கள் , ஹஜ்
Share
Share
Labels அறிவியல் , கருத்துச் சுதந்திரம் , சித்தாந்தம் , விஞ்ஞானம்
Share
Labels Poems
Share
ஒரு மலர் மொட்டுதிர்க்கும் முன்பே
உதிர்ந்து விட்டது...
பேனா திறக்குமுன்பே மை தீர்ந்து போனது...
சூரியன் உதிக்கும் முன்பே மறைந்து விட்டது...
மனிதன் பிறக்கும் முன்பு
கருவறையே அவனுக்கு கல்லறையாகிப்போனது...
மாறி முடியுமுன்பே குளங்கள் வற்றத்துவங்கி விட்டன...
வாசித்து முடிக்கு முன்பே ஒரு புத்தகம் மூடி வைக்கப் பட்டு விட்டது...
ஒரு உயிரை இறக்கும் முன்பே புதைத்து விட்டார்கள்
பயணி ஏறிக்கொள்ள முன்பே ரயில் புறப்பட்டு விட்டது..
கோடை துவங்கும் முன்பே பறவைகள் தாகத்தால் இறக்கத்துவங்கின...
இலையுதிர் ஆரம்பிக்க முன்பே மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டன...
சேவல் கூவும் முன்பே ஒரு இரவு தீர்ந்து விட்டது...
நாம் பழகும் முன்பே
பிரிந்து சிதறிப்போனோம்
அவிழ்ந்து வீழ்ந்த தஸ்பை மணிகளாய்...
கல்லூரி வாழ்வு...
நாம் நினைக்க முன்பே முடிந்து விட்டது...
Share
முதல் பகுதி
Share
Labels Literature , Shorts Stories
தொலை பேசியில் கதைத்து முடித்த ஷெரீப், ஏமாற்றத்தோடு வைத்தான். கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இந்தத் தனியார் கம்பனியில் நேர் முகப் பரீட்சைக்கு போய் வந்திருந்தான். அடுத்த நாளே முடிவை தருவதாக சொல்லி இருந்தார்கள். ஆனால், ஒரு வாரம் ஆகியும் எந்த முடிவும் வரவில்லை.
Share
Labels Literature , Shorts Stories
ட்ரூ... ட்ரூ... ட்ரூ...
ஆட்டோ சப்தம். சத்தார் களைப்பாக வந்து இறங்கினான்.
இரவு பதினொன்றரை மணி இருக்கலாம். ஊரெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது. எந்த சப்தமுமில்லை.
தூரத்தில் கேட்ட தெரு நாய்களின் குறைப்போசையும், இரவு நேரத்தில் மட்டுமே சஞ்சரிக்கும் இரவு நேரத்து உயிர்களின் சப்தமும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. அந்த மயானமான நிசப்தம் ஒருவித பீதியையும் தந்தது.
வானத்து விண்மீன்களின் நீளமான அணிவகுப்பு. ..
இருட்டுக்குப் பயந்து கறுப்புப் போர்வை போர்த்தி உறங்கும் தூரத்து மலைகள்...
ஆழ்ந்து உறங்கும் மரங்கள்
அவை புரண்டு படுப்பதாலோ என்னவோ எழும் ஓசை
அதனோடு
சேர்ந்து வரும் மெல்லிய தென்றல்
இவற்றில் எதனையும் ரசிக்கும் நிலையில் சத்தார் இல்லை. ஆட்டோவிற்குரிய கூலியை கொடுத்து அனுப்பினான். பகல் முழுதும் உழைத்துக் களைத்த வடு அவன் முகத்தில் கையெழுத்திட்டிருந்தது. காலையில் ஒன்பது மணிக்கு கடையை திறந்தால், இரவு பத்து மணியாகும் மூடுவதற்கு... பலசரக்குக்கடை.
கடையை மூடினால் சாமான்களை ஒழுங்கு
படுத்துவது, அன்றைய கணக்கு வழக்குகளை பார்ப்பது, கடையை துப்புரவு செய்வது, தேவை அற்றவற்றை அகற்றுவது எல்லாம் அவன்தான். இத்தனையும் முடித்து வீடு சேர எப்படியும் பதினொன்றை மணியாகும்.
இன்றும் அப்படித்தான்...
வீட்டு மணியை அழுத்தினான். அரைத்தூக்கத்தில் மணைவி சபீனா கதவை திறக்கிறாள்.
மெதுவாக வீட்டினுள் நுழைகிறான்.
"நுஸ்ரி, இவ்வளோ நேரம் அழுதுட்டு இப்பதான் தூங்குற. சரியான இருமல், ஒரு ஜாதி காச்சல் மாதி. நாளக்காலும் மருந்து எடுக்கோணும்".
சத்தார் எதுவும் பேசவில்லை. மெதுவாக அறைக்குள் நுழைந்தான். தான் வீட்டுக்கு வந்த உடனே வீட்டு பிரச்சினை எதயாலும் பேசுறது சத்தாருக்குப் பிடிக்கவே பிடிக்காது. 'அடுப்படில உப்புத்தூள் முடிஞ்சதிலீந்து, பக்கத்தூட்டு காணிச் சண்ட வர, மாப்புள வந்தோனே கதைக்காட்டி இவளுக்கு தூக்கமே வராது போலீக்குது'. சத்தாருக்கு கோபம்.
மனுஷன் காலைல ஈந்து கஷ்டப்பட்டு நொந்து போய் வாரான். இங்க வந்தோனக்கி இங்கயும் எனத்தயாலும் பிரச்சினைதான்.
சபீனா வீட்டு பிரச்சினை எதைப் பத்தி பேசினாலும், சத்தாருக்குப் பிடிக்காது. அவனும் கடைப் பிரச்சினைகளை அவளிடம் கதைக்க மாட்டான்.
இதனால், வீட்டில் அவன் பெரிதாக பேசுவதில்லை. உம்மென்று வாயை வைத்துகொள்வான். சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கி விடுவான்.
கலகலப்பாக வீட்டில் பேசிச் சிரித்த நாட்களே ஞாபகமில்லை சத்தாருக்கு. காலையில் எழுந்து, பல் துலக்கி, ஒரு டீயை குடித்து, குளித்து விட்டு கடிக்குப் போனான் என்றால், மீண்டும் நள்ளிரவில் தான், களைப்போடு திரும்பி வருவான். இதில் எங்கே அவனுக்கு கலகலப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்க நேரம் இருக்கப் போகிறது?
ஒரு மௌனமான வேதனையை அவர்கள் இருவரும் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.
Share
Labels Literature , Shorts Stories
"குமரி மாவட்டத்தில் வாழும் கடற்கரையை ஒட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும், எல்லா சமூகங்களுடனும் பொருந்திப் போவது... எழுத்தில் நாவல் முடிந்து விட்டாலும் நம்முள் நீள்கிறது..."
இது "துறைமுகம்" நாவலின் பின்னட்டை அறிமுகம்.
கதை இடம்பெற்ற காலம் சுதந்திரத்திற்கு சிறிது முற்பட்ட காலப்பிரிவு.
எல்லா சமூகத்திலும் இருக்கும் கொடுமைகள் இந்த முஸ்லிம் சமூகத்திலும் இருக்கிறது. ஏழைகளையும், தொழிலாலர்களையும் சுரண்டும் முதலாளி வர்க்கம், மதத்தின் பெயரால் இடம்பெறும் அநீதிகள், அதிகார வர்க்கத்தின் முரட்டுத்தனம்
... இவை அனைத்து சமுதாயங்களிலும் புரையோடிப்போயுள்ள அழுக்குகள்.
Share
Labels Literature
முதல் பகுதி
Share
Labels Literature , Shorts Stories
Share
Labels Literature , Shorts Stories
Share
Labels Literature , Shorts Stories
துள்ளித்திரிந்த என் இளமையை
திருடிக்கொண்டீர்கள்...
துன்பக் கேணியாக்கி என்
வாழ்வை,
தூசுப்பட்டரையில் என்னை தூங்க வைத்தீர்கள்...
நான் தொலைத்து விட்ட அந்த சிறுவர் பருவம்
மீண்டும் வேண்டும் எனக்கு...
உன் பூட்ஸ் கால்கள் மிதிக்கும் வெறும் துரும்பாகத்தானே
ஆகிப்போனேன்...
நானும் ஒரு மனிதன் என்று ஒரு சிறிதாவது நினைத்துப் பார்த்தாயா?...
வீழ்ந்து சிதறிய பதர்களாகிப் போனேன்...
நான் இழந்தது என்ன ஒன்றிரண்டா? அத்தனையையும்
சொல்லி விட...
வெறுமையாய் போகும் எனது நாட்கள்...
வாழவும் இயலாத, சாகவும் இயலாத கணங்கள்...
என் கால்களை விலங்கிட்டுள்ள உன் சமூக 'விலங்குகள்'...
நாரிப்புளித்துப் போன உனதான கௌரவங்களின்
அழுகிய வாசனை...
பொறுக்க முடியவில்லை...
மூக்கை அடைத்துக்கொகொள்கிறேன்...
நீயும் வேண்டாம்...
உன் உறவும் வேண்டாம்...
என்னை வாழ விடு...
தனியாய், அமைதியாய், எளிமையாய்
என் போக்கில்,
ஆர்ப்பாட்டமின்றி...
நீ போட்ட சமூக தரத்திற்கு என்னை
ஏற சொல்லாதே...
குற்றுயிராய் கிடக்குறேன்...
சறுக்கி விழுந்தால் செத்து விடுவேன்...
தயவு செய்து என்னை வாழ விடு...
இல்லை,
விட மாட்டாய்...
கடைசி மூச்சியை சுவாசித்து முடிக்கும் வரை...
நீ விட மாட்டாய் என்னை வாழ்வதற்கு...
ஒன்றை மட்டும் நினைவில் கொள்..
முடிவு செய்து விட்டேன்..
உயர்ந்து நிற்பேன்...
அல்லது செத்து மடிவேன்..
உனக்கு முன் கைகட்டி வாழ்ந்த அடிமை வாழ்வு போதுமெனக்கு...
Share
Labels Literature , Poems
நட்சத்திரங்கள் துயில் கொள்ள செல்லும் சாமத்து ராத்திரி...
ஐந்தாவது முறையாகவும் தன் நண்பிக்கு எழுதிய காயிதத்தை சரி பார்க்கிறாள் பஸ்ரினா.
"எனதருமை தோழிக்கு... உன் கடிதம் கிடைத்தது... வாழ்வின் வசந்தமான திருமண வாழ்வில் நீ நுழையப்போகிறாய்... திருமணம் என்பது மார்க்கத்தில் பாதி என்று சொல்வார்கள். .. மரணம் மட்டும், அதற்குப் பின் சுவனத்திலும் உங்கள் காதலும், உறவும் தொடரட்டும் என பிரார்த்திக்கிறேன்.... " - வஸ்ஸலாம், உனதருமை நண்பி பஸ்ரினா.
கவனமாக மடித்து, காகித உறையுள் இட்டு மேசையில் கிடந்த புத்தகத்திற்குள் பத்திரப் படுத்துகிறாள். தம்பி அய்யாஷ் நாளை கிளாஸ் போகும் போது, அவசியம் கொடுத்து அனுப்பச் சொல்ல வேண்டும். தன் மாவனெல்லை தோழியின் திருமணத்திற்கு வாழ்த்துக்கூறி எழுதிய கடிதம். நேரில் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், குறைந்தது ஒரு கடிதமாவது எழுதாமல் எப்படி இருப்பது... எத்தனை ஆண்டு கால நீண்ட நெருங்கிய நட்பு.
கடிதத்தை புத்தகத்திற்குள் வைத்ததும், ஒரு நெடிய பெரு மூச்சி. கண்ணீர் ஊற்று இலேசாக கண்ணில் வட்டம் இட்டிருந்தது. கல்லூரி வாழ்வின் முடிவோடு தான் தொலைத்து விட்ட நட்புச் சொந்தங்களை நினைக்கையில் வெளிவரும் வழமையான பெருமூச்சிதான். ஆனாலும், அந்த பெருமூச்சிக்கும், கண்நீரிற்கும் பின்னால் இன்று இருந்தது நண்பிகளல்ல. அவள்தான். இது போன்ற கடிதங்கள் வாழ்த்துச் செய்திகளை சுமந்து தன்னை தேடி எப்போது வரும்...?
பஸ்ரினா ... அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை... பிறந்தாலும் மூத்த பிள்ளையாக பிறந்து விடக்கூடாது என்பார்கள் அல்லவா? அதிலும் வறுமை தலை விருத்து பேயாட்டம் ஆடும் இந்த பாவப்பட்ட ஜனங்களின் குடும்பங்களில் பிறந்து விடவே கூடாது... இப்போது என்னவென்றால் அவள் தங்கச்சி பர்வினும் திருமண பந்தலுக்கு நிற்கிறாள்.
எத்தனையோ சம்பந்தங்கள்... எதுவும் சரிப்பட்டு வருவதாக இல்லை... ஒன்று அவர்கள் எதிர்பார்த்த சீதனமும், வாய்ப்பு வசதிகளும், வெள்ளை தோலும் ஒத்து வரவில்லை. அல்லது இவர்கள் பார்வையில் நல்ல பையனாக அமைய வில்லை. சல்லி மட்டும் போதுமா? அல்லா ரசூலுக்கு பயந்து ஈரான்டும் பாக்கோணுமே?
அவளது வயது பருவ பெண்களுக்கு உள்ள பயங்கள் அவளுக்கும் இருந்தன. ஒரு வேலை தனக்கு திருமண நடைபெறாமலேயே இருந்து விட்டால் என்ன செய்வது?... இப்படியே வெறுமையாய் சூரியன் உதித்து மறைவதை பார்த்துக்கொண்டே இருப்பதா?
###
விடியக்காலை ஒன்பது மணி இருக்கலாம்... இளம் வெயில், பச்சை போர்வை போர்த்தி வர்ணஜாலம் காட்டிக்கொண்டு இருந்த மரங்களில் பட்டுத் தெளித்தது. ரயில் நிலையத்தில் நண்பனை பிரிந்து செல்ல தயங்கும் நண்பனை போல், வெயில் வந்த பிறகும் நகர மனமின்றி, அரை மனதோடு மெதுமாக நகர்ந்தது பனிக்கூட்டம்.
சூழவும் அரண்கள் போல் நிமிர்ந்து நிற்கும் மலைகள், அவற்றில் விரித்த பசுமை வர்ண கம்பளிகள், பெருக்கெடுத்தோடும் மகவெளி கங்கை... தெற்காசியாவின் கிரீன் forest என்று இதனை பிரகடனப் படுத்தி இருப்பதாக யாரோ சொல்லக்கேட்ட ஞாபகம்... அது உண்மையோ, பொய்யோ அந்த தகுதிக்கு இந்த மலையக கிராமம் முற்றிலும் தகுதியானதுதான்.
பரீனா ... இவள்தான் பஸ்ரினாவின் தாய்... காலை உணவுக்குரிய தயாரிப்புகளை செய்து கொண்டு இருந்தாள். அவளது அடுப்பை போலவே, வயிறும் எரிந்து கொண்டுதான் இருந்தது... கல்யான வயசுல ரெண்டு கொமர வட்ச்சிட்டு எப்பிடி எறியாம ஈக்குற?
நேற்று வந்திருந்த வரனை சுற்றித் தான் பரீனாவின் சிந்தனை அலை பாய்ந்து கொண்டு இருந்தது. வந்தது பஸ்ரிநாவுக்கல்ல. தங்கச்சி பர்வினுக்கு. தங்கச்சிக்கு வரன் வருவது இது ஒன்றும் முதல் தடவை என்றில்லை. இதற்கு முன்னும் ஒன்றிரண்டு தடவை வந்தது. அதற்கு காரணம் பஸ்ரினாவை விட பர்வின் கொஞ்சம் நிறமாக இருந்தது என்பதும் அவளுக்கு தெரியும். என்றாலும் இந்த முறை வந்தது சற்று நல்லதொரு வரன். அதை விடவும் விருப்பமில்லை. காரணம், இதை விட்டால் திரும்ப இது போல ஒன்று அமையும் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. ஆனால், மூத்தவள் இருக்க, தங்கச்சியின் திருமணத்தை நடத்தவும் விருப்பமில்லை. என்ன செய்வது? இலகுவில் ஒரு முடிவுக்கு வர அவளால் இயலவில்லை. எப்பிடி முடிவுக்கு வாறது? பெத்த புள்ளகல்ட வாழ்க்க பிரச்சினை எல்லையா இது? .
###
காலை நேரம். பஸ்ரினா வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தாள். ஹோல் இல் இருந்த சிறிய புத்தக ராக்கையில் சிதறிக்கிடந்த புத்தகங்களை தூசு தட்டி ஒழுங்கு படுத்தி அடுக்கினாள். வீட்டு மூலைகளில் சிலந்திகள் பின்னிய வலைகளை தும்புத்தடியால் துடைத்தெடுத்தாள்.
ஒழுங்கின்றி இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்த நாற்காலிகளை சரிப்படுத்தினாள்.
தரையை ஒழுங்காகக் கூட்டி பெருக்கி எடுத்தாள். ஒரு மூலைக்கு கூட்டி சேர்த்த குப்பைகளையும், தூசையும் ஒரு ஷவளால் அள்ளி டஸ்பினில் போட்டாள். ஷவளில் வராத எஞ்சிய மண்ணை கதவை திறந்து வெளியே தள்ளி விட்டாள். . கதவடியில் கிடந்த பாபிசை எடுத்து தூசு தட்டி விட்டாள்.
முற்றம் கூட்டுவது, வீட்டை பெருக்குவது என்பன பஸ்ரினா அன்றாடம் செய்யும் வேலைகள். பெரும்பாலும் இவற்றை பஸ்ரினாதான் செய்வாள்.
வீட்டை பெருக்கி முடித்தவள் முகத்தில் படிந்த வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டால். குளித்து விட்டே காலை சாப்பாட்டை எடுத்தாள் உடம்புக்கு இதமாக இருக்கும்.
குளிக்கத் தேவையான உடைகளோடு குளிக்க செல்ல முட்பட்டவல் "பஸ்ரினா..." என்ற குரல் கேட்டு திரும்பினாள். சமையலறை வாசலில் தாய் நின்று கொண்டிருந்தாள்.
"ஒன்னோட ஒரு விஷயம் பேசணும்..."
"என்னம்மா...?"
"வா அங்கால ரூமுக்கு போவம்"
முன்னறைக்கு ரெண்டு பேரும் வந்தார்கள்.
"என்ன விஷயம் உம்மா?"
பரீனா தயங்கினாள். பஸ்ரினாவின் கூர்மையான விழிகளும், அவள் முகத்தில் புரண்டு விளையாடிய கேசமும் இணைந்து வெளிப்படுத்திய பஸ்ரினாவின் இளமை அழகு பரீனாவை என்னவோ செய்தது. கேட்க வந்ததை கேட்காமலேயே விட்டு விட்டாள் என்ன என்று நினைத்தாள். "என்னமா என்னமோ பேச ஒனுமுண்டு சொன்னீங்க".
பஸ்ரினாவின் கேள்வியால் பரீனா சிந்தனையில் இருந்து மீண்டாள்.
"இல்ல மவள்... ஒரு சின்ன விஷயம்..."
"......"
பரீனா சொற்களை எண்ணி எண்ணி தான் பேச வேண்டி இருந்தது. பஸ்ரினாவின் கண்களை பார்த்து நேரிடையாக கேட்கும் தைரியம் இல்லை பரீனாவுக்கு...
"இல்ல மகள் தங்கச்சிக்கு ஒரு கல்யாணம் ஒண்டு பேசி வந்தீக்கிற. நல்ல எடம்..." ஒருவாறு கேட்டுவிட்டால். பஸ்ரினாவின் கண்களை நேரடியாக சந்திக்கும் தைரியம் அவளுக்கு இல்லை. தன் மகளுக்கு ஏற்ற மருமகனை தேடி பிடிக்க முடியாத தனது கையாலாகா தனத்தை நொந்து கொண்டாள். தான் ஈக்க அவ தங்கச்சிக்கு கல்யாணம் நடக்குறத எந்த கொமர் விரும்புவா?
உலகம் தலைக்கு மேல் சுத்துறது மாதிரி இருக்குது பஸ்ரினாவுக்கு... தன் உணர்வை மறைக்கப் பார்த்தாள். கண்களில் நிறைந்த கண்ணீர் காட்டி
கொடுத்தது.
"நானும் வாப்பாவும் இதப்பத்திதான் நேத்துப் பேசின... வாப்பாக்கும் விருப்பமில்ல, ஒனக்கு முடியாம. அப்பிடி எண்டாலும், இது ஒரு நல்ல எடம். அதான் யோசிக்கிற... ஒனக்கு விருப்பமில்லாட்டி தேவல்ல".
இதற்கு மேலும் அழுகையை கட்டுப்படுத்த பஸ்ரினாவால் முடியவில்லை.
தலையணையில் முகம் புதைத்தபடி விம்மி அழத்தொடங்கினாள். அந்த அழுகை பெத்த மனதை என்னவோ செய்தது. "என்ன படச்ச நாயனே... ஏன்ட புள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்கையை கொடு", வாய் திறந்து பிரார்த்தித்தாள். அந்த பிரார்த்தனை எழு வானங்களுக்கு மேல் உள்ளவனான சகலதையும் அறிந்த இறைவனிடம் உயர்ந்து சென்றது.
"அப்பிடி எண்டா தேவயில்ல மகள்"
"இல்ல உம்மா, தங்கச்சிட கல்யாணம் நடக்கட்டும், நல்ல இடங்கள உட்டுட்டு பொறகு கவலைப்பட்டு என்ன பிரயோசனம்"
இப்பிடி பஸ்ரினா சொன்னாலும், அவளது மனதில் எவ்வளவு பாரம்
இருக்கிறது என்பதை மற்றொரு பெண்ணான பரீனாவால் உணர்ந்து கொள்ள முடியாததல்ல.
"இன்னம் நாலஞ்சு மாசம் ஈக்கிது மகள்... அதுல்லுக்கு கல்யாணத்த நடத்தினால் போதுமாம். அதுக்கு மொத எங்க சரி ஒரு எடத்த பாப்போம்"
###
தங்கச்சியின் திருமணத்திற்கு ஐந்து மாதம் இருப்பதால் அதற்கு முன் பஸ்ரினாவிதற்கு ஒரு வரனை தேடிவிட வேண்டும் என்ற துடிப்பு பெற்றோருக்கு. வலை விரித்து தேடினார்கள். காலக்கூண்டுக்குள் அடைபட்டுக்கிடந்த நாள் பறவைகள் ஒவ்வொன்றாக பறந்த வண்ணம் இருந்தது. வரன் கிடைத்த பாடில்லை.
பஸ்ரினாவுக்கு பொருத்தமே இல்லாத சில சம்பந்தங்கள் வந்தன. பஸ்ரினாவின் குணங்களுக்கு எட்டா பொறுத்தமுள்ள ஜென்மங்கள். உதறினார்கள். கிழியை வளர்த்து பூனைக்கு கொடுக்கும் தவறை ஏன் செய்ய வேண்டும்.
மார்க்க வாதிகள் கையை விரித்தார்கள். அவர்கள் பணமும், பதவியும் மட்டும் எதிர்பார்த்தார்கள்.
சமூகத்தின் மீதான வெறுப்பு... துன்பம் வரும் போது கையை கட்டி வேடிக்கை பார்க்கவும், தவறு விட்டால் குறை சொல்லவும் மட்டும் தானே இந்த பாலாய்போன சமூகத்திற்கு தெரிந்திருக்கிறது. எத்தனை உம்மாமார் தங்க கொமர்கள், ஒரு பொடியனோட பழகுறத கண்டும் காணாம உட்டுட்றாங்க. என்னத்துக்கு? சீதனம், இந்த மாதி பிரச்சினைகள் இருந்து தப்புறதுக்கு தானே? இது சரியா தவறா... பள்ளிக்குள் குந்தி வாய் கிழிய மார்க்கம் பேசுறவங்க இத லேசா ஹராம்னு சொல்லிடலாம்... ஹராம்னு வாய் கிழிய கத்துறதால மட்டும் இதுகள மாத்திட முடியுமா?
###
இந்த இரவு இப்பிடியே நீண்டு விடியாமலேயே இருந்து விடக்கூடாதா? நாளை என்ற ஒரு நாள் மட்டும் வராவிட்டால்... விடிந்தால் தங்கச்சி பார்வினின் திருமணம்...
தன்னோடு மண் வீடு கட்டுவது முதல், பாடசாலை போகும் வரை, காகிதக் கப்பல் செய்வது முதல், பரீட்சைக்கு படிப்பது வரை, ஒன்றாக வளர்ந்து, விளையாடி, ஒன்றில் ஒன்று கலந்துவிட்ட தன் தங்கை, மணப்பந்தலுக்கு மட்டும் தனியாகப் போகப் போகிறாள்.
புரண்டு , புரண்டு படுத்துப் பார்த்தாள். தூக்கம் கண்களை தழுவ மறுத்தது. உள்ளம் அமைதியாக இருந்தாள் தான், உள்ளத்தை அமைதிப்படுத்தும் உறக்கம் வரும் போலும். அவள் உள்ளத்தில் வீசிக்கொண்டிருந்த புயல் காற்றில் அடி பட்டு, உறக்கம் அவளை விட்டும் சேய்மை பட்டுப் போய்க்கொண்டு இருந்தது.
சமூகம் அவளை பற்றி என்ன சொல்லும்... அவளிடம் எதாவது குறை இருப்பதாக நினைக்க மாட்டாதா? இல்லாவிட்டால் மூத்தவள் இருக்க ஏன் இளையவளுக்கு திருமணம் செய்ய வேண்டும்? என்று தானே சமூகம் நினைக்கும். அப்படிஎன்றால் இவளின் எதிர் காலம்... ஒரு வேலை காலம் பூராகவும், வாழாவெட்டி என்ற பட்டத்தை சுமந்து கொண்டு இருக்க வேண்டியதுதானா?
அவளது என்ன கடலில் ஆர்ப்பரித்த உணர்வலைகள்....
எப்போது உறங்கினாள் என்று அவளுக்கு தெரியாது. விழித்தபோது சூரியன் உதித்து விட்டிருந்தான்.
வழமை போல் முகம் கழுவி விட்டு விளக்கு மாரை எடுத்து முற்றத்திற்கு இறங்கினாள். வெளி ஓரத்தில் அண்டை வீட்டு பெண்கள் இருவர் குசுகுசுத்த குரலில் பேசியது அந்த காலை நேர இதமான மெல்லிய காற்றில் பறந்து வந்து அவள் செவிகளில் விழுந்தது.
"என்னவாவது ஒரு குறை இருக்கணும்... இல்லாட்டி தாதாவ விட்டு எதுக்கு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஒனும்."
###
(ஓர் உண்மை கதையின் தழுவல்).
Share
Labels Literature , Shorts Stories
Share
Labels Literature
(...முதல் பகுதியின் தொடர்ச்சி..)
கலாசாரத் தளத்தில் ஏற்படுத்திய தாக்கம்
தமிழ் சினிமா தனது செல்வாக்கை ஆழமாக பதித்த மற்றொரு துறை அதன் கலாசாரமாகும். தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் சினிமா பார்க்கப் படும் இடங்களில் எல்லாம் இந்த கலாசார தாக்கம் நன்கு அவதானிக்கப்படுகிறது. ஏன்? இலங்கையிலும் கூட.
இது ஒரு விரிவான பகுதியாக இருப்பிதால், கட்டுரையின் சுருக்கம் கருதி, தமிழ் சினிமா ஏற்படுத்திய எதிர்மையான தாக்கம் தொடர்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் அது எத்தகைய செல்வாக்கை செலுத்தி இருக்கிறது என்ற அம்சத்தை மட்டும் இங்கு நோக்குவோம்.
இது தொடர்பில், "Urban Women in Contemporary India" என்ற நூலில் ஸ்ரீ வித்யா ராம் சுப்ரமணியம், மேரி பெத் ஆகியோர் முன்வைக்கும்
தரவுகள் நமது கவன ஈர்ப்புக்குரியான. இது அகில இந்தியாவையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வாக இருந்தாலும் தமிழ் நாட்டிற்கும் இது பொருத்தமானதுதான். இவ் ஆய்வு தரும் தரவுகளை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.
அண்மைய ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான வன்முறைகள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றன. 1989 இல் 67,072 ஆக இருந்த பதிவு செய்யப்பட வன்முறைகள் 1993 இல் 84,000 ஆக உயர்ந்தது. 1995 இல் டெல்லி இல் மட்டும் 12,000 கற்பளிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு முக்கியமாக சுட்டிக்காட்டத்தக்க அம்சம் 80%
குற்றச் செயல்கள் பதிவு செய்யப் படுவதில்லை என்பதாகும்.
"அதிகமாக நுகரப்படுவதால் மட்டும் சினிமா குற்றங்களை தூண்டுகிறது என்று சொல்லிவிட முடியாது. மாறாக, சினிமா மட்டுமே இந்திய கலாசாரத்தில் பாலியல் வெளிப்படையாக பேசப்படும் ஒரே ஒரே மார்க்கமாக இருக்கிறது என்பதே எமது வாதத்தை மிகவும் வலுப்படுத்துகிறது".மேற்சொன்ன தரவுகள் தமிழ் நாட்டு சூழலோடும் மிகவும் பொருந்திப் போகிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. இந்தியாவில் 22 மொழிகளில் மொத்தமாக வருடாந்தம் வெளிவரும் 800 திரைப்படங்களில் 130 படங்கள் தமிழ் நாட்டை தளமாகக் கொண்ட தமிழ் படங்கள். இதைத் தவிர 1/6 சினிமா கொட்டகைகள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன(www.tamilnation.org).
Share
"தமிழ் சினிமா அதன் எழுபத்தொன்பது ஆண்டுகால வரலாற்றில், தமிழ் நாட்டின் கலாசாரத்திலும் அரசியலிலும் மிகவும் தீர்மானமான சக்தியாக வளர்ந்து வந்துள்ளது"
Share
Copyright 2009 - யாத்ரிகன்