யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

கவிழும் ஓடங்கள் (01)

அஸ்ஹர் கல்லூரி. காலை சரியாக எழு முப்பது. மாணவர்களை அமைதிப் படுத்தும் சைலன்ஸ் பெல் கம்பீரமாக ஒலித்தது. கல்லூரியின் உள் மைதானத்தில் உடற்பயிற்சிக்காக கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் பயங்கர அமைதி. வெள்ளை ஆடையில் மாணவர்களும், மாணவிகளும் வரிசையில் நிற்கும் அருமையான காட்சி.

காலை நேர இளம் சூரியன் தன் கிரணங்களை மெல்லப் பாய்ச்சிக் கொண்டிருந்தான். சூரினை கண்டு வெட்கப்பட்ட பனிக்கூட்டம் மெல்ல நழுவிக்கொண்டிருந்தது.

மெதுவாக தேசிய கொடியும், பாடசாலை கொடியும் ஏற்றப்படுகின்றன. கணீரென்ற இனிய குரலில் கிராத், மைதானம் எங்கும் எதிரொலிக்கிறது.

கிராத் முடிய மீண்டும் மணி ஓசை. மாணவர்கள் களைந்து செல்கிறார்கள். மாணவத் தலைவர்கள் அவர்களை வரிசையாக ஒழுங்கு படுத்தி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். எறும்புகள் ஊர்வது போல் மாணவர் கூட்டம் மெதுவாக நகர்கிறது.

சிறிது நேரத்தில் மாணவர் கூட்டம் முற்றாக வகுப்புகளுக்கு சென்று முடிந்து விட்டது. பாடசாலை எங்கும் ஒரு வித அமைதி.


கல்லூரி நுழைவாயில் அருகில் இன்னும் ஒரு இருபத்தைந்து மாணவர்கள் அளவில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் "லேட் கமர்ஸ்". அவர்கள் மத்தியில்தான் நாசிர் நின்று கொண்டிருந்தான். இலேசான நடுக்கம் அவனுக்கு இருக்கவே செய்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் லேட் அவன்.

அவன் நேர காலத்தோடே பாடசாலை வந்து விட்டாலும், இப்போது சில நாட்களாக அவன் தொடர்ந்தும் பிந்தி வந்து கொண்டிருந்தான். அதற்கு காரணம் சில காலமாக உணர்ந்து வந்த பாரமான அனுபவங்கள். அதனால் இரவில் நீண்ட நேரம் வரை தூக்கம் இன்றி அவதிப்பட்டான். காலையில் எழு மணி வரை இப்போதெல்லாம் தூங்கி விடுகிறான்.

###
ஒவ்வொரு நாள் காலையும் லேட் கமர்சை   விசாரிக்கும் பொறுப்பு நிஸ்தார் ஆசிரியருடையது. நிஸ்தார் ஆசிரியர் கொஞ்சம் முரட்டு சுபாவம்தான் என்றாலும், சில நல்ல குணங்களும் அவரிடத்தில் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. நிலைமைக்கும், அவரது மூடுக்கும் ஏற்ப அவை மாறுபடும். ஒரு வித மல்டிபல் பெர்சனளிட்டி.

"எந்த நாளும் இவநோல்ட கரச்சல்", அடிக்கடி நிஸ்தார் ஆசிரியர் அழுத்துகொல்வார். இருந்தாலும் குற்ற உணர்வோடு நிற்கும் மாணவர்களை, அதட்டி, விசாரித்து, தண்டனை வழங்குவதில் ஒருவித திருப்தி அவருக்கு இருக்கத்தான் செய்தது.

ஒரு வித உளவியல் தேவையை அது அவருக்கு நிறைவு செய்திருக்கலாம்.

"லேட் கமர்ஸ்" பிரச்சினையை தடுக்க எத்தனையோ வழி முறைகளை கையாண்டு பார்த்தாகிவிட்டது. சில நாட்களில் அனைவரையும் நிற்க வைத்து கடினமான உடற்பயிற்சிகளை கொடுப்பது. அத்தகைய நேரங்களில் பேராதனை பல்கலை கழகத்தில் அவருக்குக் கிடைத்த ரெக்கிங்கை ஞாபகப் படுத்திக்கொள்வார்.

சிலபோது குப்பைகளை அல்ல வைப்பது. வெள்ளை உடைகளுடன் குப்பை அள்ளியதன் அடையாளம் அந்த நாள் முழுதும் இருக்கும். காண்பவர்கள் விசாரிப்பார்கள். நண்பர்கள் கிண்டலடிப்பார்கள். வீட்டில் ஏசுவார்கள். எனவே, இதன் பிறகாவது நேர காலத்துடன் பையன் வருவான் என்ற நம்பிக்கை.

மாணவிகள் நேரம் சென்று வருவது மிகவும் குறைவு. அவ்வாறே வந்தாலும், அவர்களை வகுப்புகளுக்கே அனுப்பி விடுவார் நிஸ்தார் ஆசிரியர்.
அவரை பொறுத்த வரை, பொடியன் மாரை விட, "புள்ளைகள்" பாடங்களில் அதிக கவனம் செலுத்துபவர்கள். காலதாமதமாக வந்தாலும் கூட, அதற்கு தகுந்த நியாயங்கள் இருக்கும்.

சிலபோது வீடுகளுக்கே திருப்பி அனுப்பி விடுவது நிஸ்தார் ஆசிரியரின் இன்னொரு வழிமுறை. சில போது பரம்பால் விலாசுவதும் உண்டு. இவற்றில் எதுவும் லேட் கமர்ஸை குறித்த பாடில்லை. "லேட் கமர்ஸ்" ஆகப் பார்த்து திருந்தா விட்டால், லேட் கமெர்ஸை குறைக்க முடியாது போல் இருந்தது.

இன்றும் ஒரு இருபது, இருபத்தைந்து லேட் கமெர்ஸ் இருப்பதை கண்ட நிஸ்தார் ஆசிரியர் ஒரு பரம்போடு அவர்களை நோக்கிச் சென்றார்.
###

நிஸ்தார் ஆசிரியர் மிக அருகிலேயே வந்து விட்டார். அவரது கூறிய கண்களை சந்திக்க முடியாமல் தன் தலையை தாழ்த்திக்
 கொள்கிறான் நாசிர். 

 அவனது மஞ்சள் நிறமாகி விட்டிருந்த சட்டையும், பிய்ந்து போய் காலுறை வெளியே தெரியும் விதமாக இருந்த பழைய சப்பாத்தும், கரண்டைக்கால் வரை உயர்ந்து சிறுத்து விட்டிருந்த கால்சட்டையையும் பார்க்க அவனுக்கே அருவருப்பாக இருந்தது.

நாசிர் அழகான பையன்தான். அடர்த்தியான முடி: அழகான இரு கண்கள்: நடுத்தர உயரம்: சாதாரண நிறம்: கவர்ச்சியான முகம். வாய், மூக்கு, காது, கண்கள் அனைத்தும், சரியான அளவுகளில் அமைந்து அவனுக்கு அழகு சேர்த்தன.

இருந்தாலும், அவனது ஏழ்மையை பறைசாற்றும், தன்னம்பிக்கை அற்ற அவனது தோற்றம் இவற்றில் எதனையும் பிரயோசனமற்றதாக்கியது.

"நாசிர், நீ என்டக்கிம் லேட்"

நிஸ்தார் ஆசிரியரின் குரல் கேட்டு தலையை உயர்த்துகிறான் நாசிர். நிஸ்தார் ஆசிரியர்   எரிச்சலோடு பார்த்துக்கொண்டு இருக்கிறார். வேறு எவரும் ரெகுலர் லேட் கமெர்ஸ் இல்லை போலிருக்கிறது.

"இண்டக்கித்தான் லாஸ்டா இருக்கோனும், சரியா? லைனா க்லாஸ்ஸுக்கு போங்கோ. நாசிர், நீ நில்லு. நீ எந்த நாளும் லேட். "
மற்ற  அனைவரும் சென்று விட்டார்கள்.


அதற்குள் அங்கு வந்த பாடசாலை பியோனிடம் ஏதோ உரையாடினார் நிஸ்தார் சார். நாசிரின் இதயம் "பட், பட்" என்று அடித்துக்கொண்டிருந்தது. கால்கள் இலேசாக நடுங்கின. தலை இலேசாக வீங்குவது போன்ற உணர்வு. நெற்றியிலும், மூக்கிலும் படிந்த வியர்வையை கைகளால் துடைத்துக்கொண்டான்.


அவன் பயந்தது நிஸ்தார் ஆசிரியருக்கு இல்லை. அதனை விட அவன் பயந்தது அவன் மானம் போகிறதே என்றுதான். முழுப் பாடசாலைசும் அவனை பார்த்து எள்ளி நகையாடிக்கொண்டிருப்பதான உணர்வு.

இருந்தாலும் அவன் என்ன செய்வான். நேர காலத்தோடு தூங்க வேண்டும் என்று தான் அவன் முயற்சி செய்கிறான். தூக்கம் வராமல் இருப்பதற்கு இவன் என்ன செய்வான்?

சில காலமாக அவன் உணர்ந்து கொண்டிருந்த சில நினைவுகளே அதற்குக் காரணம்.

பியோன் சென்று விட்டான். நிஸ்தார் சேர் இவன் பக்கம் திரும்பினான். "உனக்கு என்ன செய்கிறது?"" என்றார் நிஸ்தார் ஆசிரியர் தலையை சொறிந்து கொண்டே.

"சேர், இண்டக்கி லாஸ்ட் சான்ஸ் சேர்"
"எத்துன நாளக்கி லாஸ்ட் சான்ஸ் தாறது?"
"சேர் இண்டக்கி மட்டும்... லாஸ்ட்"
"சரி, நாளக்கி நீ நேரத்தோட வா... இண்டக்கி நீ வர வானம். வீட்டுக்குப் போ..."
"ப்ளீஸ் சேர்"
"போ... போ"
"சேர், ப்ளீஸ் சேர், இண்டக்கி ஒரு அஸ்ஸெஸ்மென்ட் டெஸ்டும்  இருக்குது. சேர், மிஸ் பண்ணினா கஷ்டம் சார்"
ஓர் அண்டப் புலுகல்.

வீட்டுக்கு திரும்பிச் செல்வதில் நாசிரிற்கு இரண்டு சிக்கல்கள். ஒன்று வீட்டில் ஏச்சிக் கேட்க வேண்டும். இரண்டு இருக்கின்ற ஹோம் வோர்க்குகள் தெரியாமல் போய்விடும்.

 வர வர இந்தக் கணக்குப் பாடமே விளங்க மாட்டேன் என்கிறது. இந்த லட்சணத்தில் வகுப்புக்கு வராவிட்டால் அது சமர்கிருதமாகி விடும். இதனால், இப்போதெல்லாம் பாடசாலைக்கு கட போடுவதை விட்டு விட்டான். எனவே தான், வீட்டுக்குத் திரும்பிப் போவதை அவன் விரும்பவில்லை. இல்லை என்றால் அவன் இதுதான் சந்தர்ப்பம் என்று திரும்பிப் போய் இருப்பான்.

ஆனால், வேடிக்கை என்னவென்றால் 'ஒரு முக்கியமான ஒரு கணிப்பீட்டுப் பரீட்சை இருக்கிறது' என்று நாசிர் கூறியதை நிஸ்தார் ஆசிரியர் அப்படியே  நம்பி விட்டதுதான். அவர் நம்பி விட்ட படியால் நாசிரை திருப்பி அனுப்பும் என்னத்தை அப்படியே கைவிட்டு விட்டார். ஏதோ ஒரு வகை இறக்கம் அவருக்கு நாசிர் மீது இருக்கத்தான் செய்தது.

"அப்பிடி எனத்தயாலும் ஈரண்டா நேரத்தோட நீ வந்தீக்கொனும்",
என்றவர் பாடசாலையை சுற்றி ஒரு நோட்டம் விட்டவர், "சரி இண்டக்கித்தான் லாஸ்ட், இதுக்குப் பொரவ் என்ன அசைமன்ட்
 ஈக்கிரண்டாலும் உடமாட்டேன், வெளங்குதா? போ, கலாஸ்ஸுக்குப் போ, ஓடு"
என்றார் நிஸ்தார் ஆசிரியர்.

அவனையும் அறியாமல் வந்த பொய் ஒருவாறு தனது காரியத்தை சாதித்து விட்டது. அது ஒரு வித சாதனை போல் அவனுக்கு தோன்றினாலும், சென்றுவிட்ட மானம் திரும்பி வருமா என்ன? என்ற அவனது மனம் இன்னொரு கோணத்தில் சிந்தித்தது. நடு  மைதானத்தில் வைத்து அவனை நிஸ்தார் ஆசிரியர் விசாரித்ததை முழுப் பாடசாலையும் பார்த்துகொண்டிருந்தது.
ஜி மண்டபத்தை தாண்டி,  படிகளால் ஏறி ஏ மண்டபத்தில் ஒரு தொங்கலில் இருந்த பத்து டி வகுப்புக்கு சென்று சேர்ந்தான். மரத்தால் விழுந்தவனை மாடு குத்தியது போல், வகுப்பாசிரியை அனல் பறக்கும் கண்களோடு அவனை நோக்கினார்.

####

" என்ன இது லேட்? ஆ...? இது ஸ்கூலா? இல்ல மாமி வீடா? நெனச்ச நேரத்துக்கு வாரத்துக்கு? பாருங்க... அரை மணித்தியாலம், பாடம் தொடங்கி ...."

சுபைதா டீச்சர் எரிந்து விழுந்தார். சுபைதா டீச்சர் எங்கோ வெளியூர். தமிழ் பாடம் தான் அவர் கற்பித்தாலும், அவரது தமிழ் உச்சரிப்பில் நிறைய சிங்கள தாக்கம் இருக்கும். இந்த ஊரில் கல்விக்கு முன்னால் வியாபாரத்தில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்ற கோபம் அவருக்கு. அந்த கோபத்துக்குப் பின்னால் இந்த ஊரில் இருந்த வசதி  வாய்ப்புக்கள் குறித்த பொறாமையும் வசதியாக மறைந்து கொண்டிருந்தது. ஆனால் வேடிக்கை அந்தக் கோபத்தை நாசிர் போன்றவர்களிடம் அவர் காட்டுவதுதான்.

சுபைதா டீசெரின் ஏச்சுக்கு நாசிர் பதிலெதுவும்
 சொல்லவில்லை. சுபைதா ஆசிரியர் பேசும் போது அமைதி காப்பதுதான் சிறந்த வழிமுறை என்று நாசிர் அனுபவத்தில் அறிந்து வைத்திருந்தான். பதில் கூற முற்பட்டால், வெறும் வாயை மேல்லுபவனுக்கு அவல்  வேறு கிடைத்த கதையாகி விடும். அதனால் அவன் எதுவும் பேசவில்லை.

"ஆ... வந்து உக்காருங்கோ..." வேண்டா  வெறுப்போடு சொன்னார் சுபைதா டீச்சர். நாசிரை சுபைதா டீசெருக்கு பிடிக்காது. அவருக்கு அழாகாக உடுத்தி, முன் வரிசையில் உட்காருவோரைதான் பிடிக்கும். அவரை பொறுத்த வரை அவர்கள்தான்  படிப்பில் கவனம் செலுத்தும் பொடியன்மார். கிளீன்  இல்லாமல், லேட் ஆகி வந்து, பின்வரிசையில் வந்து உட்காருவோர் அவருக்கு ஒரு சிறிதும் பிடிக்காது.

அவர் எதைச் சொல்லி இருந்தாலும், தாங்கிக் கொண்டிருக்க முடியும். நாசிர் உடைகள் காட்டிக் கொடுத்த அவன் ஏழ்மையை அவன் பார்த்த அருவருப்பான பார்வை அவனை என்னவோ செய்தது. தொண்டையின் ஏதோ ஒரு ஆழ்த்தில் துக்கம் வந்து அடைத்துக்    கொண்டது.

"கொஞ்சம் கிளீனா வரப்படாதா? ஒங்கட ஷூவ பாருங்களே? என்ன அது புது டிசைனா? ", முழு கிளாசும் சிரித்தது.

இன்று புதிதாகக் கழுவித்தான் சட்டையை போட்டிருந்தான். என்ன தான் கழுவினாலும் பழையது பழையதுதானே!  ஏதோ வேண்டுமென்றே அழுக்காக வருவதாக நினைக்கிறாளா சுபைதா?

அவனது தன்னம்பிக்கை முற்றாக சிதைந்து சுக்கு நூறாகியது. கைகளை பிசைந்து கொண்டான். பின் வரிசையில் பொய் உட்காருவதற்கு அவன் பட்ட பாடு... யாரோ  பின்னால் இருந்து இழுப்பது போலவும், அதனை தாண்டி தான் நடப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. வியர்வை அவனை நனைத்திருந்தது. முகமெங்கும் வியர்வை. முதுகெங்கும் வியர்வை காரணமாக பற்றி எரிந்தது.

"எந்தடா நீ இவ்வளோ நோண்டி ஆகுற? வேலல்லடா நீ" முன்னால்
 அமர்ந்து இருந்த பைரூஸ் திரும்பி. அதற்கு ஒத்து பாடுவது போல் இன்ஷாப்  ஒரு சிரிப்பு.

நாசிர் டீச்சர்மார்  யாரையும் எதித்துப் பேசுவதில்லை. பேசினால் என்ன நடக்கும் என்பது அவனுக்குத் தெரியும். வசதி, அந்தஸ்த்து, அதிகாரம் அனைத்தும் உள்ளவர்கள் தவறு செய்யும் போது கண்டுக்காத சமூகம் ஒரு சாதாரண மனிதனின் சாதாரண பிழையையும் எந்தளவு அலட்டிக்கொள்ளும் என்பது அவனுக்குத் தெரியும்.

சுபைதா டீச்சர்  பாடத்தை தொடர்ந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம், அனைவரும் நாசிரின் அன்றைய சம்பவத்தை மறந்து விட்டார்கள். ஆனால் நாசிர் மட்டும் மறக்கவில்லை.

(இரண்டாம் பகுதியை வாசியுங்கள்)
Share

0 பதிவு குறித்த கருத்துக்கள்:

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்