துள்ளித்திரிந்த என் இளமையை
திருடிக்கொண்டீர்கள்...
துன்பக் கேணியாக்கி என்
வாழ்வை,
தூசுப்பட்டரையில் என்னை தூங்க வைத்தீர்கள்...
நான் தொலைத்து விட்ட அந்த சிறுவர் பருவம்
மீண்டும் வேண்டும் எனக்கு...
உன் பூட்ஸ் கால்கள் மிதிக்கும் வெறும் துரும்பாகத்தானே
ஆகிப்போனேன்...
நானும் ஒரு மனிதன் என்று ஒரு சிறிதாவது நினைத்துப் பார்த்தாயா?...
வீழ்ந்து சிதறிய பதர்களாகிப் போனேன்...
நான் இழந்தது என்ன ஒன்றிரண்டா? அத்தனையையும்
சொல்லி விட...
வெறுமையாய் போகும் எனது நாட்கள்...
வாழவும் இயலாத, சாகவும் இயலாத கணங்கள்...
என் கால்களை விலங்கிட்டுள்ள உன் சமூக 'விலங்குகள்'...
நாரிப்புளித்துப் போன உனதான கௌரவங்களின்
அழுகிய வாசனை...
பொறுக்க முடியவில்லை...
மூக்கை அடைத்துக்கொகொள்கிறேன்...
நீயும் வேண்டாம்...
உன் உறவும் வேண்டாம்...
என்னை வாழ விடு...
தனியாய், அமைதியாய், எளிமையாய்
என் போக்கில்,
ஆர்ப்பாட்டமின்றி...
நீ போட்ட சமூக தரத்திற்கு என்னை
ஏற சொல்லாதே...
குற்றுயிராய் கிடக்குறேன்...
சறுக்கி விழுந்தால் செத்து விடுவேன்...
தயவு செய்து என்னை வாழ விடு...
இல்லை,
விட மாட்டாய்...
கடைசி மூச்சியை சுவாசித்து முடிக்கும் வரை...
நீ விட மாட்டாய் என்னை வாழ்வதற்கு...
ஒன்றை மட்டும் நினைவில் கொள்..
முடிவு செய்து விட்டேன்..
உயர்ந்து நிற்பேன்...
அல்லது செத்து மடிவேன்..
உனக்கு முன் கைகட்டி வாழ்ந்த அடிமை வாழ்வு போதுமெனக்கு...
Share
என்னையும் கொஞ்சம் வாழ விடு...!
Posted by
Riza Jaufer
Saturday, October 3, 2009
Labels Literature , Poems
1 பதிவு குறித்த கருத்துக்கள்:
u can designed more ur web page
Post a Comment