விடிந்தும், விடியாத
சாம்பல் நிற
அதிகாலை பொழுதின் அமைதி...!
ஏழையின் முகத்தில் இயல்பாகத்
தோன்றும் புன்னகை...!
ஒரு மழை இருட்டு அந்திப் பொழுதில்
தூரத்து தென்னை மரத்தில் பட்டுத்தெறிக்கும்
மாலை வெயில்...!
உலகம் உறங்கி விட்ட நடு நிசியில்
இரவு நேரத்தில் நேரத்தில் மட்டுமே சஞ்சரிக்கும்
சிறிய உயிர்களின் ஓசை...!
நிஜமாக நேசிக்கும் நண்பர்களோடு
சேர்ந்திருக்கக் கிடைக்கும்
அரிதான கணங்கள்...!
என்னாலும் மற்றொருவன் பிரயோசனம்
அடைகிறான் எனும் போது
உருவாகும் ஆழ் மனத்திருப்தி ...
ஈமானிய உணர்வு உச்ச கட்டத்தை
அடையும் போது தொழும் நீண்ட இரண்டு ரகஅத்துகள்...
நீதி மறுக்கப்பட்ட ஒருவனுக்காக
குரல் கொடுக்க
நினைக்கையில் மனதில் உருவாகும் தைரியம்...!
பிரச்சினைகள் உச்ச கட்டத்தை
அடையும் போது
உதவி புரிய முடியுமானவர்கள் கைவிட்டுச் செல்ல
உதவி புரிய முடியாதவர்கள் சொல்லும் குறைந்த பட்ச
ஆறுதல் வார்த்தைகள்...
முழுமையாக உழைத்துக் கலைத்து
செலவழித்த ஒரு நாள்
முடியும் தருவாய்...!
உள்ளம் நிறைந்த நிலையில் உறங்கும் உறக்கம்...
நீண்ட குரலில் ஒலிக்கும்
குர்-ஆன் ஓசை
மழலை மொழி பேசி கொஞ்சும் குழந்தைகளோடு
சிரித்து விளையாடும் நேரங்கள்...!
என்னை வெருத்தொதுக்கியவனுக்கே
உதவி புரிய கிடைக்கும்
சந்தர்ப்பங்கள்...!
இலட்சியம்
ஈடேறும் என்று ஏற்படும் நம்பிக்கை...!
எத்தனையோ, எத்தனையோ
நான்
விரும்பி ரசிக்கும் கணங்கள் என் வாழ்விலும்...!
1 பதிவு குறித்த கருத்துக்கள்:
ஒவ்வொரு வார்த்தையும் அறுமையாக உள்ளது இது உங்கள் கற்பனையோ அல்லது உண்மையோ எனக்கு தெரியாது உண்மையாயின் சந்தோஸமே
Post a Comment