முதல் பகுதி
இரண்டாம் பகுதி
நள்ளிரவு பன்னிரெண்டை தாண்டி இருந்தது. உலகம் இருள் போர்வையை போர்த்திக்கொண்டு உறங்கிக் கிடந்தது. நாய்கள் குறைக்கும் சப்தமும், நரிகள் ஊழை இடும் சப்தமும், இரவு நேர உயிரினங்களின் ஓசையும் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இருந்திருந்தாற்போல் வாகனங்கள் செல்லும் ஓசை கேட்டது. வவ்வால்கள் சிறகடிப்பது கூட அந்த அமைதியில் தெளிவாகக் கேட்டது.
அவனது கனவுகளும் இப்படித் தான் சிதரப்போகிறதா?
###
"அடுத்த வருடம் ஒ.எல் பரீட்சை
வருகிறது. கணிதப் பாடத்துல பாஸ் பன்னல்லாட்டி A/L படிக்கேலா.
அதுக்காக கணிதப் பாடத்துக்காக ஒரு மேலிதிக கிளாச ஏற்பாடு சென்ஜீக்குறோம். மாசத்திக்கி முன்னூறு ரூபா எடுக்குறோம். எங்கட ராஷிதா டீச்சர்தான் நடத்துவார்."
உப அதிபர் அறிவித்தார்.
நாசிர் அந்த கிளாசுக்கு எப்படியும் போவதாக முடிவெடுத்துக்கொண்டான்.
கணிதத்தில் சித்தி அடைந்தால்தான் A/L படிக்கவே
முடியும். அது மட்டுமில்லாமல்.... அவன் இலட்சியமாகக் கொண்டிருக்கும் பொறியியலாளர் ஆகுவதென்றாலும், அதற்கு கணிதம் அவசியம் தேவை. ஆனால், அந்த முன்னூறு ரூபாய்தான் எங்கோ இடித்துக்கொண்டிருந்தது...
"முன்னூறு ரூபாய்"
அதனை சம்பாதிக்க அவன் தந்தை என்ன பாடு பட வேண்டும்?
நாசிர் போன்றவர்களுக்கு முன்னூறு
ரூபாய் என்பது முப்பதாயிரம் ரூபாய்க்குச் சமன். அதனை சம்பாதிக்க அத்தனை பாடு பட வேண்டும்.
உப அதிபர் அதன் பிறகு என்ன சொன்னார் என்பது பற்றியோ, வகுப்பில் என்ன நடந்தது என்பது பற்றியோ கவனிக்காத அளவு அவன் சிந்தனை வேறெங்கோ சிறகடித்துப் பறந்தது.
அவன் மீண்டும் நினைவு திரும்பிப் பார்த்த போது, ஒரு அரை வாசிப் பேர் பெயர்களை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். மிகுதி அரைவாசிப் பேர் கொடுக்கவில்லை. மேலதிக வகுப்பு அவசியமில்லையா? அல்லது ராஷிதா டீசெரின் வகுப்புக்குச் செல்ல விருப்பமில்லையா? அல்லது அவர்களும் நாசிரை போன்ற நிலைமையில் உள்ளவர்களா? நாசிரிற்குத்
தெரிந்திருக்கவில்லை. அதனை ஆராய்ச்சி செய்யும் மன நிலையிலும் அவன் இல்லை.
நாசிர் இந்த வகுப்புகளுக்கு போவது குறித்து வீட்டில் கதைக்கவில்லை.
ஏனெனில், கூலித் தொழிலாளியாக இருக்கும் அவன் தந்தையால் வீட்டுச் செலவு, மூன்று சகோதரிகளினதும் கல்விச் செலவு என்பவற்றை பூர்த்தி செய்வதே கஷ்டமாக இருந்தது. இதில் இன்னும் ஏன் ஒரு சுமை? அவர்கள் தருவார்கள். ஆனால், இவனால் ஏன் அவர்கள் கஷ்டப்பட வேண்டும்.
அவனுக்காக அவர்கள் கஷ்டப்பட்டிருப்பது போதாதா?
###
நாட்கள் நகர்ந்தன. கணித பாட வகுப்பு ஆரம்பமாகி விட்டது. அது போதாதென்று தனியார் கல்வி நிலையங்களில் நடாத்தப்பட்ட மேலதிக வகுப்புகளுக்கும் அவனது சகாக்கள் போய் கொண்டு இருந்தார்கள். நாசிர் மட்டும் வெட்டியாக இருந்தான்.
கணித வகுப்பு ஆரம்பிக்கப் பட்ட பிறகு, பாடசாலை நேரங்களில் ராஷிதா டீச்சர் ஒழுங்காக படிப்பிப்பதும் குறைந்து விட்டது. மேலதிக வகுப்பில் அவர் நன்றாக படிப்பிப்பது அவனது சகாக்களின் அடைவு மட்டத்தில் இருந்து, ஓரிரு வாரங்கள் உள்ளாகவே நாசிர் நன்கு உணர்ந்து கொண்டான். தனது வகுப்புக்கு வராதவர்களால், கணிதத்தில் சித்தியெய்த முடியாது என்பதை நடை முறையில் காட்ட ராஷிதா டீச்சர் முட்பட்டுக்கொண்டிருந்தார்.
இப்படித்தான் ஒரு
சிலர் செய்யும் வெட்கம் கேட்ட செயல்களால், புனிதமான ஆசிரியர் தொழிலுக்கே இழுக்கை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
நாசிரைத்தான் இந்த நடை முறை மிக மோசமாக பாதித்தது. ஏனெனில், மற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் இடம் பெற்ற மேலதிக வகுப்புகளுக்கு சென்று வந்தார்கள்.
சில நாட்களுக்கு முன் இடம் பெற்ற கணிப்பீட்டு பரீட்சை ஒன்றில் அவன்தான் மிகக் குறைந்த புள்ளிகளை பெற்றிருந்தான்.
ராஷிதா டீச்சர் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். பகுதி தலைவரிடம் ஒரு முறை அதனை காட்டினார்.
"இங்க பாருங்கோ சார், கொறச்சி மாக்ஸ் எடுத்த எல்லாரும், கிளாசுக்கு வராத ஆக்கள்"
அவரும் பார்த்து விட்டு, "இந்த எஸ்ஸெஸ்மேன்ட் டெஸ்ட பாத்தா ஒன்கலோளுக்கு வெளங்கும், இந்த கிலாஸ்ட முக்கியத்துவம்"
என்று அட்வைஸ் பண்ணி விட்டுப் போனார்.
இந்த கணிப்பீட்டு பரீட்சை முழுக்க, முழுக்க அவரது அந்தி நேர வகுப்பில் படிப்பித்த அம்சங்களை வைத்து நடத்தப்பட்டது என்பதை பகுதித் தலைவர் புரிந்திருக்க நியாயமில்லை. அப்படி ஓர் பரீட்சையில் (?) நூற்றுக்கு இருபது புள்ளியை பெற்றது கூட அவனுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
ஒரு காலத்தில் நாசிர் எப்படியும் எழுபத்தைந்து, எண்பது, சில போது தொண்ணூறு புள்ளிகளை கணிதத்தில் பெற்றுக்கொண்டிருந்தான். பரீத் சேர் பாடம் எடுக்கும் போது எவ்வளவு அழாகாக படிப்பித்தார். ஆசிரியர் என்றால் பரீத் சேர் போல் இருக்க வேண்டும். இந்த ராஷிதா வந்ததன் பிற்பாடுதான் எல்லா தலை வழியும்.
நாசிரின் விழிகளில் இலேசாக கண்ணீர் நிறைத்திருந்தது. யாரும் தெரியாமல் அதனை துடைத்துக்கொண்டான்.
இதனை யாரிடம் சொல்லி தீர்வு காண்பது? சொன்னால் அவனை பற்றி இழிவாக நினைக்க மாட்டார்களா?
நாசிரால் எதிர்காலம் என்ற ஒன்றையே கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
அடுத்த வருடம் வரும் O/L பரீட்சையை எப்படி முகம் கொடுப்பது? தப்பித் தவறி கணிதத்தில் சித்தி பெறத் தவறி விட்டால்....
A/L படிக்க முடியாது
... பல்கலை கழகம் நுழைய முடியாது. யாராவது ஒரு ஹாஜியாரிடம் ஏச்சிப் பேச்சுக் கேட்டுக்கொண்டு சம்பளத்துக்கு வேலை செய்ய வேண்டி இருக்கும். அந்த நிலையில் அவன் தலையில் பாரமாக இருக்கும் சகோதரிகளை எப்படி கரை சேர்ப்பது?
###
எத்தனை மணிக்கு அவன் உறங்கினான் என்று அவனுக்குத் தெரியாது. விழித்துப் பார்த்த போது விடிந்து கிடந்தது.
"உன்ன எழுப்பி எழுப்பிப் பாத்தேன்... ஸ்கூல் போறத்துக்கு... எந்த இப்பிடி தூங்குறே? பத்து மணி... இப்பயாலும் எழும்பு"- அவன் தாய்.
அப்படி என்றால் அவன் இன்று ஸ்கூல் போகவில்லை.
போய்த்தான் என்ன பிரயோசனம்? இனி போனாலும் ஒன்று, போகா விட்டாலும் ஒன்று.. அவனது மனது ஒரு முடிவுக்கு வந்திருந்தது.
இந்த பாழாய் போன சமூககடலில் இன்னும் எத்தனை கனவுக் கப்பல்கள்தான் கவிழப்போகிறது என்று யோசித்ததால் எழுந்த சோகத்தாலோ என்னவோ பக்கத்து வீட்டு சேவல் ராகமெடுத்துக் கூவியது. Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment