இலக்கியமும் கலையும் தனி மனிதனும் சமூகத்தினதும் சிந்தனை தளத்தில்
ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி விடக்கூடியவை. கலைகள் ஏற்படுத்துகின்ற நுண்மையானதும் கூர்மையானதுமான தாக்கம் கலாசாரத்தின் பல்வேறு கூறுகளிலும் பலமான அதிர்வுகளை ஏற்ற்படுத்தி விடுகின்றது.
ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி விடக்கூடியவை. கலைகள் ஏற்படுத்துகின்ற நுண்மையானதும் கூர்மையானதுமான தாக்கம் கலாசாரத்தின் பல்வேறு கூறுகளிலும் பலமான அதிர்வுகளை ஏற்ற்படுத்தி விடுகின்றது.
குறிப்பாக சினிமாவை பொறுத்தவரை இந்நிலையை நன்கு அவதானிக்கலாம். சினிமா சமூகத் தளத்திலும், அரசியல், கலாசார தளங்களிலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் இதனையே உறுதிப்படுத்துகின்றன. இதனால் நவீன காலத்தில் சினிமா முக்கியமான ஒரு கருவியாக இருப்பதை காண்கிறோம்.
குறிப்பாக ஹாலிவுட் சினிமா யூதர்களால் தமது, பண்பாட்டு, கலாசார, அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதாற்காக திட்டமிட்டு கையாளப்பட்டு வருகின்றது. முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை இத்துறையில் பாரியதொரு இடைவெளியே நிலவுகின்றது. அதிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் பற்றி கேட்கவும் வேண்டியதில்லை.

புலமைத்துவ மட்டத்தில் இது ஓரளவு உணரப் பட்டு இருந்த போதிலும், நடைமுறையில் இதைச் செயல் படுத்துவதில் நிறைய தடைகளை எதிர் கொள்ள வேண்டி உள்ளது.
முஸ்லிம் இளையர்கள் சாக்கடை சினிமாவில் உழன்று சீரழிந்து கொண்டுள்ள நிலையில், எமக்கான சினிமாவின் தேவை குறித்து சமூகம் இன்னும் உணர்ந்து இருப்பதாக தெரியவில்லை. சீரழிந்த சினிமாவை மட்டும் பார்த்து பழகிப் போன சமூகத்திற்ற்கு சினிமா என்றாலே "சீ" என்ற மனநிலை தான் தோன்றுகின்றது. இந்நிலையில் எமக்கான ஒரு சினிமாவை ஒருவாக்கி அதனை சமூகத் தளத்திற்கு கொண்டு செல்லல் என்பது ஒரு சவாலான பணி என்பதில் சந்தேகமில்லை.
இத்தகைய சவால்கள் அனைத்தையும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை தரும் விதத்தில் வெளிவந்துள்ளது புகல்டம் and புரிதல். SIM நிறுவனத்தின் வெளியீடாக முகிதீன் ஹசன், இஸ்மாயில் முஸ்டீன், மற்றும் அஷ்-ஷெய்க் A.B.M. இத்றீஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியில் வெளி வந்துள்ள இந்த வெளியீடு இரண்டு குறும் படங்களை உள்ளடக்கி உள்ளது.

இலங்கை முஸ்லிம் சினிமா வரலாற்றில் இதனை ஒரு புதிய புறப்பாடு என்றும் சொல்லலாம். ஏற்கனவே, TRIM ARTS போன்ற வெளியீட்டகங்கள் ஈரான் சினிமாக்களுக்கு தமிழில் sub tittle வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தாலும் புகலிடம் & புரிதல் என்பன முற்றிலும் இலங்கை தயாரிப்பாகவே அமைந்துள்ளது.
இரண்டு குறும்படங்களும் மிகக் குறுகிய நேரமே காட்சி தந்தாலும், அவை முன்வைக்க முனைகின்ற கருவும், அதனை முன்வைக்க முயலும் பாங்கும், எம்மால் நிறையவே சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை தருகின்றது.
தொழில் நுட்பத் தரம், ஒளிப்பதிவு என்பன போதிய திருப்தியை தராவிட்டாலும் , கன்னி முயற்சியே இந்தளவு இருக்கிறது என்னும் போது, இலங்கை முஸ்லிம் சினிமாவின் எதிர் காலம் பசுமையாக இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
(Published in எங்கள் தேசம் (Engal Thesam): February 1-14, 2008)
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment