இரவுகள் நீண்டு செல்கின்றன...!
நாய்களின் குறைப்போசையோடு உருவாகும் இரவு நேரத்து
வெறுமை உள்ளத்தை வாட்டி எடுக்கிறது...!
எதிர்காலம் குறித்த நம்பிக்கை இன்றியே
விருப்பமின்றிச் செய்யும் தர்மத்தின் கஷ்டத்தோடு
விழிகளைத் தழுவுகிறது உறக்கம்...!
எதுவும் செய்வதற்கு வேலைகளற்ற
காலைப் பொழுதுகள்...!
உற்சாகமற்ற விடியல்கள்...!
அர்த்தமற்று கழிந்து செல்லும் நேரம்...!
கையாலாகாத் தனத்தை நொந்து கொண்டு
உள்ளத்தை பிழியும் வேதனை...!
பொறுப்பற்ற சமூகத்தின் குத்தல்
மொழிகள்...!
உதவி புரியும் போர்வையில் நடக்கும்
கழுத்தறுப்புக்கள்...!
படித்த படிப்பும், விழித்த இரவுகளும்
ஒரு பெறுமானம் அற்றுப் போகும் கணங்கள்...!
கைச்செலவையும் சொந்தப் பணத்தால்
செய்ய முடியாத கையாலாகாத்தனம்...!
தோள் கொடுக்க வேண்டியவர்களே உதைத்துத் தள்ளும்
கஷ்டமான அனுபவங்கள்...!
கழுத்தருப்பிற்கே காத்திருக்கும்
கழுகுக் கூட்டங்கள்...!
நானும் ஒரு வேலையில்லாப் பட்டதாரி...!
உற்சாகத்தோடு விடியும்
ஒரு விடியலை எதிர் நோக்கிக்
காத்திருக்கிறேன்...!
அச்சம்
சூழ்ந்த ஒரு யுத்த பூமியின் இரவைப் போல்
அதுவும் நீண்டு செல்கிறது...!
Share
1 பதிவு குறித்த கருத்துக்கள்:
//விருப்பமின்றிச் செய்யும் தர்மத்தின் கஷ்டத்தோடு
விழிகளைத் தழுவுகிறது உறக்கம்...!//
அருமை !
Post a Comment