பைனஸ் மரங்கள் ஆடும் அசைவில்
மெல்லிய காற்று மேனியை வருடிச் செல்லும்...!
காலை நேரத்து பனிக்கூட்டம் தேகத்தை
அணைத்துக்கொள்ளும்...!
இளஞ்சூரியன் அனாயாசமாக அள்ளித்தெரிக்கும்
சூரிய கதிர்கள் ஒரு புதிய நாளை உறுதியோடு ஆரம்பிக்க வஸிய்யத் செய்யும்...!
உடற்பயிற்சிக்கான நீண்ட
அணிவகுப்பு அலுப்பைத்தரும்...!
அதட்டும் மாணவர் தலைவர் கூட்டம்
எரிச்சலை ஊட்டும்...!
ஒரு சோம்பேறி ஆசிரியர் கூட்டம்
கதையளந்து வேடிக்கை பார்க்கும்...!
இனிய குரலில் கிராத் ஒளி தூரத்து
மலையில் பட்டு எதிரொலிக்கும்...!
காலை மணி அருவலை ஊட்டும்...!
இடை வேலை நேரங்களில் கிளை பரப்பி
நிழல் தந்த அந்தப் பெயர் தெரியாத
பூ மரம் தினமும் முற்றத்தை
பெருக்கச் சொல்லி அடம் பிடிக்கும்...!
ஸ்கூல் கட் அடித்தலால் சுழலும் அந்த
தும்புக்கட்டைப் பிடி
உள்ளங்கையில் அடையாளத்தை பதித்துச் செல்லும்...!
வீட்டு வேலையை உருப்படியாகச் செய்யாததால்
முட்டங்காலில் நிற்கையில் தூசுத்தரை வெள்ளாடையில்
கையெழுத்திடும்...!
தூரத்தில் கேட்கும் பரம்பின்
சுழற்சி சப்தத்தில் முழுக் மண்டபமும்
மௌன ராகம் பாடும்...!
அனைத்தும் தெரிந்த ஒரு
பழைய மாணவர் கோஷ்டி கல்லூரி எங்கும்
சுற்றித்திரியும்...!
ஒரு சோகமான முடிவுரையோடு
கல்லூரி வாழ்வு முற்றுப் பெரும்...!
இன்னொரு போராட்டமும்,
நினைவுகளை பத்தித்து
செல்லும் வாழ்வும் அதன் பிறகு துவங்கும்...!
Share
1 பதிவு குறித்த கருத்துக்கள்:
முடிவில்லா தொடர்கதையாய் கல்லூரி(யின்) வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
மிக அழகா சொல்லியிருக்கீங்க பாஸ்...
Post a Comment