
Labels Poems
ஒரு மலர் மொட்டுதிர்க்கும் முன்பே
உதிர்ந்து விட்டது...
பேனா திறக்குமுன்பே மை தீர்ந்து போனது...
சூரியன் உதிக்கும் முன்பே மறைந்து விட்டது...
மனிதன் பிறக்கும் முன்பு
கருவறையே அவனுக்கு கல்லறையாகிப்போனது...
மாறி முடியுமுன்பே குளங்கள் வற்றத்துவங்கி விட்டன...
வாசித்து முடிக்கு முன்பே ஒரு புத்தகம் மூடி வைக்கப் பட்டு விட்டது...
ஒரு உயிரை இறக்கும் முன்பே புதைத்து விட்டார்கள்
பயணி ஏறிக்கொள்ள முன்பே ரயில் புறப்பட்டு விட்டது..
கோடை துவங்கும் முன்பே பறவைகள் தாகத்தால் இறக்கத்துவங்கின...
இலையுதிர் ஆரம்பிக்க முன்பே மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டன...
சேவல் கூவும் முன்பே ஒரு இரவு தீர்ந்து விட்டது...
நாம் பழகும் முன்பே
பிரிந்து சிதறிப்போனோம்
அவிழ்ந்து வீழ்ந்த தஸ்பை மணிகளாய்...
கல்லூரி வாழ்வு...
நாம் நினைக்க முன்பே முடிந்து விட்டது...
Share
முதல் பகுதி
Labels Literature , Shorts Stories
தொலை பேசியில் கதைத்து முடித்த ஷெரீப், ஏமாற்றத்தோடு வைத்தான். கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இந்தத் தனியார் கம்பனியில் நேர் முகப் பரீட்சைக்கு போய் வந்திருந்தான். அடுத்த நாளே முடிவை தருவதாக சொல்லி இருந்தார்கள். ஆனால், ஒரு வாரம் ஆகியும் எந்த முடிவும் வரவில்லை.
Labels Literature , Shorts Stories
ட்ரூ... ட்ரூ... ட்ரூ...
ஆட்டோ சப்தம். சத்தார் களைப்பாக வந்து இறங்கினான்.
இரவு பதினொன்றரை மணி இருக்கலாம். ஊரெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது. எந்த சப்தமுமில்லை.
தூரத்தில் கேட்ட தெரு நாய்களின் குறைப்போசையும், இரவு நேரத்தில் மட்டுமே சஞ்சரிக்கும் இரவு நேரத்து உயிர்களின் சப்தமும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. அந்த மயானமான நிசப்தம் ஒருவித பீதியையும் தந்தது.
வானத்து விண்மீன்களின் நீளமான அணிவகுப்பு. ..
இருட்டுக்குப் பயந்து கறுப்புப் போர்வை போர்த்தி உறங்கும் தூரத்து மலைகள்...
ஆழ்ந்து உறங்கும் மரங்கள்
அவை புரண்டு படுப்பதாலோ என்னவோ எழும் ஓசை
அதனோடு
சேர்ந்து வரும் மெல்லிய தென்றல்
இவற்றில் எதனையும் ரசிக்கும் நிலையில் சத்தார் இல்லை. ஆட்டோவிற்குரிய கூலியை கொடுத்து அனுப்பினான். பகல் முழுதும் உழைத்துக் களைத்த வடு அவன் முகத்தில் கையெழுத்திட்டிருந்தது. காலையில் ஒன்பது மணிக்கு கடையை திறந்தால், இரவு பத்து மணியாகும் மூடுவதற்கு... பலசரக்குக்கடை.
கடையை மூடினால் சாமான்களை ஒழுங்கு
படுத்துவது, அன்றைய கணக்கு வழக்குகளை பார்ப்பது, கடையை துப்புரவு செய்வது, தேவை அற்றவற்றை அகற்றுவது எல்லாம் அவன்தான். இத்தனையும் முடித்து வீடு சேர எப்படியும் பதினொன்றை மணியாகும்.
இன்றும் அப்படித்தான்...
வீட்டு மணியை அழுத்தினான். அரைத்தூக்கத்தில் மணைவி சபீனா கதவை திறக்கிறாள்.
மெதுவாக வீட்டினுள் நுழைகிறான்.
"நுஸ்ரி, இவ்வளோ நேரம் அழுதுட்டு இப்பதான் தூங்குற. சரியான இருமல், ஒரு ஜாதி காச்சல் மாதி. நாளக்காலும் மருந்து எடுக்கோணும்".
சத்தார் எதுவும் பேசவில்லை. மெதுவாக அறைக்குள் நுழைந்தான். தான் வீட்டுக்கு வந்த உடனே வீட்டு பிரச்சினை எதயாலும் பேசுறது சத்தாருக்குப் பிடிக்கவே பிடிக்காது. 'அடுப்படில உப்புத்தூள் முடிஞ்சதிலீந்து, பக்கத்தூட்டு காணிச் சண்ட வர, மாப்புள வந்தோனே கதைக்காட்டி இவளுக்கு தூக்கமே வராது போலீக்குது'. சத்தாருக்கு கோபம்.
மனுஷன் காலைல ஈந்து கஷ்டப்பட்டு நொந்து போய் வாரான். இங்க வந்தோனக்கி இங்கயும் எனத்தயாலும் பிரச்சினைதான்.
சபீனா வீட்டு பிரச்சினை எதைப் பத்தி பேசினாலும், சத்தாருக்குப் பிடிக்காது. அவனும் கடைப் பிரச்சினைகளை அவளிடம் கதைக்க மாட்டான்.
இதனால், வீட்டில் அவன் பெரிதாக பேசுவதில்லை. உம்மென்று வாயை வைத்துகொள்வான். சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கி விடுவான்.
கலகலப்பாக வீட்டில் பேசிச் சிரித்த நாட்களே ஞாபகமில்லை சத்தாருக்கு. காலையில் எழுந்து, பல் துலக்கி, ஒரு டீயை குடித்து, குளித்து விட்டு கடிக்குப் போனான் என்றால், மீண்டும் நள்ளிரவில் தான், களைப்போடு திரும்பி வருவான். இதில் எங்கே அவனுக்கு கலகலப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்க நேரம் இருக்கப் போகிறது?
ஒரு மௌனமான வேதனையை அவர்கள் இருவரும் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.
Labels Literature , Shorts Stories
"குமரி மாவட்டத்தில் வாழும் கடற்கரையை ஒட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும், எல்லா சமூகங்களுடனும் பொருந்திப் போவது... எழுத்தில் நாவல் முடிந்து விட்டாலும் நம்முள் நீள்கிறது..."
இது "துறைமுகம்" நாவலின் பின்னட்டை அறிமுகம்.
கதை இடம்பெற்ற காலம் சுதந்திரத்திற்கு சிறிது முற்பட்ட காலப்பிரிவு.
எல்லா சமூகத்திலும் இருக்கும் கொடுமைகள் இந்த முஸ்லிம் சமூகத்திலும் இருக்கிறது. ஏழைகளையும், தொழிலாலர்களையும் சுரண்டும் முதலாளி வர்க்கம், மதத்தின் பெயரால் இடம்பெறும் அநீதிகள், அதிகார வர்க்கத்தின் முரட்டுத்தனம்
... இவை அனைத்து சமுதாயங்களிலும் புரையோடிப்போயுள்ள அழுக்குகள்.
Labels Literature
முதல் பகுதி
Labels Literature , Shorts Stories
Labels Literature , Shorts Stories
Labels Literature , Shorts Stories
துள்ளித்திரிந்த என் இளமையை
திருடிக்கொண்டீர்கள்...
துன்பக் கேணியாக்கி என்
வாழ்வை,
தூசுப்பட்டரையில் என்னை தூங்க வைத்தீர்கள்...
நான் தொலைத்து விட்ட அந்த சிறுவர் பருவம்
மீண்டும் வேண்டும் எனக்கு...
உன் பூட்ஸ் கால்கள் மிதிக்கும் வெறும் துரும்பாகத்தானே
ஆகிப்போனேன்...
நானும் ஒரு மனிதன் என்று ஒரு சிறிதாவது நினைத்துப் பார்த்தாயா?...
வீழ்ந்து சிதறிய பதர்களாகிப் போனேன்...
நான் இழந்தது என்ன ஒன்றிரண்டா? அத்தனையையும்
சொல்லி விட...
வெறுமையாய் போகும் எனது நாட்கள்...
வாழவும் இயலாத, சாகவும் இயலாத கணங்கள்...
என் கால்களை விலங்கிட்டுள்ள உன் சமூக 'விலங்குகள்'...
நாரிப்புளித்துப் போன உனதான கௌரவங்களின்
அழுகிய வாசனை...
பொறுக்க முடியவில்லை...
மூக்கை அடைத்துக்கொகொள்கிறேன்...
நீயும் வேண்டாம்...
உன் உறவும் வேண்டாம்...
என்னை வாழ விடு...
தனியாய், அமைதியாய், எளிமையாய்
என் போக்கில்,
ஆர்ப்பாட்டமின்றி...
நீ போட்ட சமூக தரத்திற்கு என்னை
ஏற சொல்லாதே...
குற்றுயிராய் கிடக்குறேன்...
சறுக்கி விழுந்தால் செத்து விடுவேன்...
தயவு செய்து என்னை வாழ விடு...
இல்லை,
விட மாட்டாய்...
கடைசி மூச்சியை சுவாசித்து முடிக்கும் வரை...
நீ விட மாட்டாய் என்னை வாழ்வதற்கு...
ஒன்றை மட்டும் நினைவில் கொள்..
முடிவு செய்து விட்டேன்..
உயர்ந்து நிற்பேன்...
அல்லது செத்து மடிவேன்..
உனக்கு முன் கைகட்டி வாழ்ந்த அடிமை வாழ்வு போதுமெனக்கு...
Share
Labels Literature , Poems
Copyright 2009 - யாத்ரிகன்